
PAN card Aadhaar card must be linked 2023
PAN Card Aadhar Card linking பான் கார்டுடன் இணைக்காத வங்கி கணக்கு தொடர்ந்து செயல்படுமா?வருமான வரித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பு..!
மதிய நிதியமைச்சகம் பலமுறை பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கியது,கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஆதார் கார்டு,பான் கார்டு இணைக்க கடைசி நாள்.
இல்லாவிட்டால் அது செயலிழந்து விடும் என எச்சரிக்கை செய்தது இதனால் உங்களுடைய பான் கார்டு நீங்கள் பயன்படுத்த முடியாது அதற்கு அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
மேலும் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வருமான வரி துறையின் முக்கிய விதிமுறைகள்
வருமான வரித்துறையின் விதிமுறைகளின் படி செயல்படாத பான் கார்டு என்பது பான் கார்டு இல்லாததற்கு சமம்.
வங்கி கணக்கை தொடங்குவதற்கு இந்த பான் கார்டை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
பான் கார்டு இல்லாத பட்சத்தில் அல்லது பான் கார்டு செயல்படாத பட்சத்தில்,உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய பான் கார்டு செயல்படவிட்டால் வெளிநாடுகளுக்கு நீங்கள் பணம் அனுப்ப முடியாது.
வெளிநாட்டு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாது, வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது.
டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வாங்குவதற்கு நீங்கள் கட்டாயம் பான் கார்டு வழங்க வேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் பான் கார்டு செயல்படாமல் இருந்தால் சிக்கல் ஏற்படும் KYCக்கு பான் கார்டு அவசியம்.
உங்கள் பான் கார்டு செயல்படவிட்டால் அதை மீண்டும் புதுப்பிக்க முடியும்,அதற்கு உங்கள் ஆதார் நம்பரை பயன்படுத்தி ரூபாய் 1,000/- அபராதம் செலுத்த வேண்டும்.
பான் கார்டு இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தால் பான் கார்டு அடுத்த 30 நாட்களுக்குள் செயல்படாது.
எப்போது பான் கார்டு செல்லுபடி ஆகும் நிலையில் வைத்திருக்க வேண்டும்,பான் கார்டு இப்போது பல்வேறு திட்டங்களுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது.
ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டும் அப்படி இணைக்காவிட்டால் உடனடியாக இணைத்து விடுங்கள்,அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று பான் கார்டு,ஆதார் கார்டுடன் இணைக்கலாம்.
நாட்டிலுள்ள அனைத்து ஆவணங்களுடன் கட்டாயம் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம்,பான் கார்டு,பாஸ்போர்ட்,உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுக்கு கட்டாயம் இனிக்க வேண்டும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவை அடைந்தது
லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் மாருதியின் புதிய கார்..!