
PAN Card Aadhar Card link last date 2023
ஜூலை 1ம் தேதி முதல் இந்த நபர்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்த முடியாது மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன..!
ஜூன் 30-ம் தேதிக்குள் பான் கார்டு ஆதார் அட்டையும் இணைக்கப்பட வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
12 இலக்கங்களைக் கொண்ட புகைப்படத்துடன் கூடிய ஆதார் எண்களை தற்போது இந்தியாவில் அடையாளமாக பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் வருமானவரி துறை சார்பில் பான் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த எண் மூலம் தனிப்பட்ட நபரின் வரவு செலவு கணக்குகள் வருமானவரித்துறைக்கு தெரிந்து விடும்.
தற்போது பான் கார்டு எண்ணையும், ஆதார் கார்டு எண்ணையும், 2023 மார்ச் 30ஆம் தேதிக்குள் இணைக்க வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
எனினும் பெரும்பாலானோர் அதனை இணைக்காமல் இருப்பதால் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2023 ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை இதற்கு காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரும் ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும், இணைக்காவிட்டால் கார்டு பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு என்னையும் ஆதார் எண்ணையும் எப்படி எல்லாம் இணைக்கலாம் என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் எண்ணை,பான் கார்டு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுகிறது.
ஆதார் எண் இல்லாதவர்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது, ஆதார் கார்டு விண்ணப்ப படிவற்றில் உள்ள எண்ட்ரோல்மென்ட் ஐடியை கொடுக்கலாம்.
e-filling என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் வருமான வரி துறையின் இணையதள e-filling இணையதளத்தில் லாகின் செய்து பாஸ்வேர்ட் பிறந்த தேதியை கொடுக்க வேண்டும்.
இந்த விவரங்களை என்டர் செய்த பிறகு இப்பொழுது நீங்கள் ஒரு கேப்சாவை டைப் செய்ய வேண்டும்.
இதன் பிறகு போர்டலில் லாகின் செய்த பின்னர் பான் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்க சொல்லி ஒரு பாப் அப் விண்டோ தெரியும், இல்லாவிட்டால் Profile Setting சென்று அதில் லிங்க் ஆதார் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதுபோன்ற விவரங்களை நீங்கள் ஏற்கனவே வருமான வரி துறையின் இணையதளத்தில் பதிவிட்டு இருந்தால் இப்பொழுது திரையில் காட்டப்படும் விவரங்களும்.
உங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்களும் ஒன்றாக இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
இரண்டும் ஒன்றாக இருக்கிறது என்றால் உங்கள் ஆதார் கார்டு வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.
பான் கார்டு ஆதார் கார்டு ஏன் இணைக்க வேண்டும்
இந்தியாவில் போலியான ஆதார் கார்டு இருக்கிறது, இதன் மூலம் போலியான ஆதார் கார்டு நீக்கப்படும்.
ஒரு நபர் வருமான வரித்துறைக்கு சரியாக வரி செலுத்தாமல் தவறான கணக்கு காண்பித்தாலும் இந்த இணைப்பு மூலம் கண்டுபிடித்து விடலாம்.
இந்தியாவில் அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படுவதால் இங்கு தவறுகள் நடப்பது 90% அளவில் குறைக்கப்படுகிறது.
போலியான பான் கார்டு நீக்கப்படும் போலியான ஆதார் கார்டு நீக்கப்படும் இதனால் வருமான வரித்துறைக்கு வருமான வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
ஒரு நபர் எவ்வளவு சம்பாதிக்கிறார் அவரின் கணக்கு வழக்குகள் வருமானவரித்துறைக்கு முழுமையாக தெரியும்.
12ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் தேதி வெளியீடு
ஒடிசா ரயில் விபத்தில் 288 நபர்கள் உயிரிழக்க இதுதான் முக்கிய காரணம்
அடிவயிற்றில் இருக்கும் விடாப்படியான கொழுப்பை கரைக்க வேண்டுமா