
PAN card new rules full details
பான் கார்டு விதிமுறைகளில் புதிய மாற்றம் இந்த செயல்முறையை பின்பற்றவில்லை என்றால் உங்களுடைய பான்கார்டு பயன்படுத்த முடியாது..!
பான் கார்டில் நீங்கள் சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் உங்களுடைய பான்கார்டு பயன்படுத்த முடியாது.
இனிவரும் காலங்களில் பான் கார்டு இருந்தால் மட்டுமே உங்களால் வங்கி சேவையை பயன்படுத்த முடியும் மற்றும் நீங்கள் தொழில் தொடங்க முடியும்.
அனைத்து செயல்களுக்கும் மத்திய அரசு பான் கார்டு கட்டாயம் தேவை என ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் வருமான வரித்துறை அடிக்கடி அல்லது வருடத்திற்கு ஒருமுறை பான் கார்டு உரிய விதிமுறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறது.
அதுவும் தற்போது பான் கார்டு புதிய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
இதைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டால் மட்டுமே உங்களுடைய பான் கார்டு எப்படி, எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும், என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும் மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.
வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த வேண்டும் என்றால் இப்பொழுது கண்டிப்பாக பான் கார்டு தேவை.
பான் கார்டில் 5 புதிய விதிமுறைகள் இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது, அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், என்ற முக்கியமான ஆவணங்களில் பான் கார்டு எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.
இந்த பான் கார்டு மூலம் ஒரு நபரின் வங்கி கணக்கு வழக்குகள் அவருடைய தனிப்பட்ட வருமானம் போன்றவற்றை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
பான் கார்டு விதிமுறைகள் 1
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பான் கார்டு ஒரு நபருக்கு தேவைப்பட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் இணையதளத்தில் அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
ஆனால் இப்பொழுது அதற்கு ஒரு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது,அதாவது பான் கார்டு வேண்டும் என்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் விண்ணப்பித்தவுடன் பான் கார்டு கிடைத்துவிடாது.
குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படும் அதாவது ஒரு மாதம் கழித்து பான் கார்டு உங்களுடைய வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பப்படும்.
இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளது அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு மேல் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பான் கார்டு விதிமுறைகள் 2
நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள், நல வாரியம், போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் கட்டாயம் அனைத்து வங்கி பரிமாற்றத்திற்கும் பாங்காடு பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு விதிமுறைகள் 3
மொத்த வருமானம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, ஆகிய இடங்களில் நிதிஆண்டில் 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் கட்டாயம் பான் கார்டு பயன்பாடு பயன்படுத்த வேண்டும்.
பான் கார்டு விதிமுறைகள் 4
கணவரை பிரிந்து வாழ்கிறவர்கள், தங்களுடைய பிள்ளைகளின் பான் கார்டில் தங்களது தந்தையின் பெயரை குறிப்பிடத் தேவையில்லை, அவர்களது அன்னையின் பெயரை குறிப்பிடலாம் என்றும் அறிவித்துள்ளது.
பான் கார்டு விதிமுறைகள் 5
வங்கி கணக்கு துவங்குவதற்கு, வருமான வரி பூர்த்தி செய்வதற்கு, கட்டாயம் பான் கார்டு தேவை என அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் என்ன செய்வது
அடிவயிற்றில் விடாப்படியான கொழுப்பை கரைக்க
பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறைகிறது