செய்திகள்

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..! Passport Apply Document List in Tamil

Passport Apply Document List in Tamil

Passport Apply Document List in Tamil

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

நாம் நாட்டை விட்டு வெளியே செல்வதற்கு கட்டாயம் கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட் தேவை.

நம் நாட்டில் பெரும்பான்மையான இளைஞர்கள் முதல் முதலாவதாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

அப்படி நீங்கள் வெளிநாடு செல்வதற்கு முக்கியமாக தேவைப்படும் ஒன்று பாஸ்போர்ட்,இந்த பாஸ்போர்ட்டை நீங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.

அத்தகைய பாஸ்போர்ட்டை நீங்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்,என்பதை இந்த பதிவின் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யும்போது சரியான ஆவணங்களை எடுத்துச் செல்லவில்லை என்றால் உங்களுடைய ஆவணங்கள் சில நேரங்களில் நிராகரிக்கப்படும்.

அதனால் சரியான ஆவணங்கள் கட்டாயம் தேவை அந்த ஆவணங்களை பற்றி முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு ஆவணங்கள்

இருப்பிடச் சான்றிதழ்:

குடும்ப அட்டை (Family Card)

பான் கார்டு (Pan Card)

ஓட்டுநர் உரிம அட்டை (Driving license card)

உங்களுடைய தற்போதைய வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook)

உங்கள் பெயரில் உள்ள எரிவாயு சிலிண்டர் ரசீது (Gas cylinder receipt in your name)

மேலே கொடுக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் இரண்டு இருந்தால் போதும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு.

பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)

பள்ளியில் படித்த மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)

26.01.1989 என்ற தேதியில் அல்லது இந்த தேதிக்குப் பிறகு நீங்கள் பிறந்து இருந்தால் நகராட்சியில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

உங்களின் பிறப்பு சான்றிதழை அரசாங்கத்தில் உள்ள நோட்டரி பப்ளிக் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கினால் அந்த சான்றிதழ் ஒத்துக் கொள்ளப்படும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு தேவை.

பாஸ்போர்ட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உங்களுடைய பாஸ்போர்ட்டிற்க்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி அதனை புதுப்பித்துக் (Renew) கொள்ளலாம்.

உங்களுக்கு அவசரமாக பாஸ்போர்ட் தேவை என்றால் தட்கல் முறையில் கட்டணத்தை செலுத்தி பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளும் சிறப்பு வசதி நம் நாட்டில் இருக்கிறது.

உங்களின் பாஸ்போர்ட் தேதி Expiry முடிந்த பிறகு காணாமல் போனால் அல்லது சேதம் அடைந்தால் அதற்கான கட்டணத்தை செலுத்தி நீங்கள் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோல் உங்களில் பாஸ்போர்ட் தேதி (Expiry Date) முடிவடைவதற்குள் காணாமல் போனால் அல்லது சேதமடைந்தால் அதற்கான கட்டண செலுத்தி புதிய பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளும் வசதி வாய்ப்பு நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் முதல் முதலில் வாங்கிய பாஸ்போர்ட்டை 9 வருடம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதன் பிறகு மறுபடியும் புதுப்பித்துக்கொள்ளலாம் இந்த புதுப்பிப்பதற்கு நீங்கள் விண்ணப்பம் செய்தால் 15 நாட்களில் உங்களுடைய பாஸ்போர்ட் மறுபடியும் உங்களுக்கு வழங்கப்படும்.

தேவைப்பட்டால் உங்களுடைய பாஸ்போர்ட்டில் நீங்கள் முகவரி கூட மாற்றிக் கொள்ள முடியும்.

உங்களுடைய பாஸ்போர்ட்டை நீங்கள் பல்வேறு முக்கிய ஆவண அடையாளமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்களுடைய பாஸ்போர்ட்டை நீங்கள் டிஜிட்டல் வடிவிலும் சேமித்து வைக்கும் வசதி வந்துள்ளது,விரைவில் டிஜிட்டல் பாஸ்போர்ட் நம் நாட்டின் வழங்கப்படும்.

நீர்மூழ்கி கப்பலை 5 நாட்களாக தேடும் கனடா

How to change minor PAN card to Major PAN card

How to apply new voter id online in tamil

New privacy feature in WhatsApp 2023

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is your reaction?

Excited
1
Happy
5
In Love
0
Not Sure
1
Silly
2