
Pathira Pathivu New Rules and Regulations in Tamil
பத்திரப்பதிவு இனிமேல் எந்த ஆவணத்தையும் மாற்ற முடியாது காரணம் என்ன என்று தெரியுமா தமிழக அரசின் புதிய அதிரடி முடிவு..!
பத்திரப்பதிவு முறைகளில் பொதுமக்களின் வசதிக்காக எத்தனையோ பல மாற்றங்களும் அறிவிப்புகளும் அவ்வபொது செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்பொழுது ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவு முறையானது பல்வேறு வசதிகளையும் அறிவிப்புகளையும் செய்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது இணையதளம் ஆகிவிட்டதால் பத்திரப்பதிவிற்கு வரும் பொதுமக்கள்.
நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்ற சூழல் உருவாகப்பட்டுள்ளது.
15 நிமிடத்திற்குள் பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பத்திரப்பதிவிற்கு வரும் பொதுமக்கள் கையில் பணம் எடுத்து வரவும் தேவையில்லை மேலும் போலிபத்திரம் ஒழிந்திருக்கிறது, போலிபத்திரப்பதிவு புதிய சட்டத்தின் படி இதுவரை 2500 போலிபத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவண எழுத்தாளர், இடைத்தரகர்கள், ஆகியோர் சார்பதிவாளர் பதிவாளர் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி எல்லாம் இணையதள பதிவு செய்யப்படுகிறது,இடத்தை வாங்குபவர், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு கொண்டுவர அவசியம் இல்லை.
நாளுக்கு நாள் பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்தும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பணம் பாதுகாப்பாக இருப்பதற்கும் அரசாங்கம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் ஒரு நிலத்திற்கு பல்வேறு உரிமையாளர் இருக்கிறார்கள், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், நிலத்தை வாங்கி ஏமாந்தவர்கள், சொந்த நிலத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் இருக்கும் நபர்கள் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் பல்வேறு புகார்கள் தமிழக அரசாங்கத்திற்கும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் குவிந்து வருகிறது.
இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என அரசு போர்க்கள அடிப்படையில் இப்படி ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக திருமணம் சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டது.
இனிமேல் திருத்தவே முடியாது
மின்னணுமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரை இடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இதன் முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவே முடியாது.
அது மட்டுமல்லாமல் ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதன் மூலம் மெய் தன்மை உறுதி செய்யப்படும்.
இப்போது ஆவணங்கள் அனைத்திலும் 1/05/2023 பிறகு பதிவு செய்யப்பட்ட நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத்துறை ஐஜி இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கும் போது ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களை பிரித்து எடுத்து சேமித்து வைப்பதன் மூலமாக அவற்றின் மெய் தன்மை எந்த காலத்திலும் உறுதி செய்யப்படும்.
நம்பிக்கை இணைய திட்டமானது பதிவு துறையில் கடந்த 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நம்பிக்கை இணையம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணைப் பதிவுத்துறை தலைவர்களுக்கான, அலுவலகத்தில் மட்டுமே செயல்படத் தக்க வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை இணையம் என்றால் என்ன?
நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்ட ஆவணங்களின் நகல்களை பொதுமக்கள் கூறினால் உரிய விண்ணப்பத்தின் அடிப்படையில் அவற்றை வழங்கலாம்.
ஆனால் அப்படி வழங்கும் போது நம்பிக்கை இணையத்தின் இலச்சினை சான்றிட்ட நகரின் இடறப்புரத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.
அவ்வாறு அச்சிடப்பட்டிருந்தால் அந்த ஆவணங்கள் நம்பிக்கை இணையம் வழி சரிபார்க்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை இணையம் என்பது குடிமக்களின் ஆவணங்கள் தரவுகளை பாதுகாப்பான முறையில் சேமிக்க அரசு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு இணைய வழி சேவையாகும்.
அத்துமீறி ஆவணங்களை திருடுவது, ஆவணங்களை கசி விடுவது, போன்றவற்றில் இருந்து பொதுமக்களின் ஆவணங்களை காக்கவே, இந்த நம்பிக்கை இணையும் வழி வகுக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு