
Pathira Pathivu some important details in tamil
பத்திரப்பதிவு வீடு மனை வாங்க போகிறீர்களா? கட்டாயம் நீங்கள் இந்த தகவல்கலாம் தெரிந்திருக்க வேண்டும்..!
நீங்கள் வீடு மனை வாங்க திட்டமிட்டு இருந்தால் கட்டாயம் சில தகவல்களை நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
இன்றைய சூழலில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு பலரும் விருப்பம் தெரிவித்தாலும் ஆவணங்கள் என்பது மிகவும் முக்கியம்.
இதற்காகவே ரியல் எஸ்டேட் துறை நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டியது மிக அவசியம்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு நபரின் லட்சியம் இந்த லட்சியத்தை அடைவதற்காக தங்கள் வாழ்நாளையே பணயம் வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி வீடு கட்டினாலும் அந்த கடனை அடைத்து முடிக்கவே பல வருடங்கள் தேவைப்படுகிறது.
வீடு மனைகள் வாங்கினாலும் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க தவறி விடுகிறீர்கள்.
ஒரு சில முக்கிய அம்சங்களை வீடு மனை வாங்குபவர்கள் மிகவும் நன்றாக கவனிக்க வேண்டும்.
மனைக்கான சாலைகள் அளவு குறைந்தபட்சம் அகலம் 23 அடியாக இருக்க வேண்டும்.
தாய் பத்திரம் மிக மிக முக்கியம்
முக்கியமாக வீடு மனைகளை யாராவது விற்பனை செய்ய முன் வந்தால் சம்பந்தப்பட்ட வீட்டு மனையின் மூலம் பத்திரம் என்று சொல்லும் தாய் பத்திரத்தை முழுமையாக நீங்கள் படித்து பார்த்து அறிய வேண்டும்.
வழக்கறிஞர் போன்றவர்களிடம் அந்த தாய் பத்திரத்தை காண்பித்து அதில் ஏதாவது முரண்பாடு இருக்கிறதா என்பதையும் நீங்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த வீடு அல்லது மனைக்கு யாரெல்லாம் உரிமையாளர்களாக இருக்கிறார்கள் சொத்தின் உரிமையாளர் உண்மையான உரிமையாளரா என்பதை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக குறைந்தது 30 வருடங்களுக்கான வில்லங்க சான்றிதழ்களை நீங்கள் பெற்று.
அதை வழக்கறிஞர் அல்லது உங்களுக்கு தெரிந்த ரியல் எஸ்டேட் துறை நிபுணர்களிடம் காண்பித்து,அதைப்பற்றி முழுமையான தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதேபோல் எந்த ஊரில் வீடு வாங்குகிறோம் அந்த ஊரின் அடிப்படை அமைப்பு என்ன? அங்கிருக்கும் அடிப்படை வசதிகள் என்ன?என்பதை பற்றி அங்கு சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களிடம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்
நீங்கள் வாங்கப் போகும் வீடு ஊரமைப்பு துறையால் முறையாக அங்கீகரிக்கப்பட்டதா,என்பதையும் நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
டிடிசிபி (DTCP) அங்கீகாரம் அளித்த வரைபடத்தின் நகல் காப்பியை வாங்கி அதாவது (பீல்ட் மேப்) (Field Map) மற்றும் அ-பதிவேடு வாங்கி நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வீடு எங்கே இருக்கிறது.
அதை சுற்றிலும் உள்ள சாலைகள் என்னென்ன? அவைகளுக்கு முறையான சாலை இணைப்பு, குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, மின்சார வசதி, கழிவு நீர் வசதி, உள்ளதா என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட வீட்டு மனையை சர்வேயர் மூலம் நான்கு பக்கமும் சரியாக அளவிட்டு பார்க்க வேண்டும் காரணம் தாய் மூல பத்திரத்தில் இருக்கும் அளவுகளும்.
நீங்கள் சர்வே அளக்கும் போது இருக்கும் அளவுகளும் சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் மழை நீர் வடிகால் வசதி, பாதாள சாக்கடை திட்டம், போன்ற வசதிகளை ஏற்படுத்த உரிய வசதி அந்த இடத்திற்கு இருக்கிறதா என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக நீங்கள் வீடு வாங்கும் போது அந்த பெயரில் மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், ஏதாவது நிலுவையில் இருக்கிறதா என்பதையும் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை நீங்கள் வாங்கப் போகும் மனையின் ஆவணங்களில் ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அந்த மனை உரிமையாளரின் அனுமதியுடன்.
சொத்து வாங்குவது பற்றியும் அதில் ஆட்சேபம் இருப்பவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தெரிவிக்கும்படி செய்தித்தாள்களில் நீங்கள் விளம்பரம் செய்யலாம்.
அதேபோல் சொத்தினை கிரயம் வாங்கும்போது சொத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லாவிட்டால் அவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் அவரது வாரிசுகள் சான்றிதழ் மிக முக்கியம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Morning drinks to lower bad cholesterol
How to change Passport photo in tamil
How to renew your old Passport in online 2023