
Patta Chitta Enral Enna Details in tamil
பட்டா சிட்டா என்றால் என்ன ஏன் அது ஒரு நிலத்திற்கு மிக முக்கியமாக தேவை..!
பட்டா சிட்டா என்றால் என்ன ஏன் அது பயன்படுத்த வேண்டும்,ஒரு நிலத்திற்கு ஏன் ரொம்ப முக்கியமாக இருக்கிறது.
நிலத்திற்கான பத்திரம் இருக்கும்போது பட்டா சிட்டா ஏன் அரசாங்கம் அல்லது சில இடத்தில் கேட்கிறார்கள்.
பட்டா சிட்டா என்பது ஒரு நபரின் சொத்து ரீதியான மற்றும் சட்ட ரீதியிலான உரிமைகளை நிரூபிக்கும் பொழுது பயன்படுத்தப்படும் ஒரு ஆவணம் தான் பட்டா என்று அழைக்கப்படுகிறது.
மேலும் பட்டா சிட்டா பற்றி விவரங்களையும் பட்டாவின் வகைகளையும் நாம் இந்த பதிவில் முழுமையாக பார்க்க போகிறோம்.
பட்டா சிட்டா என்றால் என்ன?
பட்டா சிட்டா என்பது சொத்துக்கள் மீதான உரிமைகளை நிரூபிக்கும் ஆவணம் தான் பட்டா என்று அழைக்கப்படுகிறது.
இவற்றை தமிழ்நாடு அரசு நிலப்பதிவேடு வசதியை மக்களுக்காக ஏற்படுத்தி அவற்றை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கும் வருவாய் துறையினர் கீழ் இந்த சேவைகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
பட்டா என்பது ஒரு நிலத்திற்கு வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும்.
சிட்டா என்பது சொத்துக்கள் அமைந்துள்ள அளவு, பகுதிகள், உரிமையாளர்கள் போன்ற முக்கிய விவரங்களை உள்ளடக்கி ஆவணம் தான் சிட்டா என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பட்டா சிட்டா ஆவணங்களை இணையதளம் மூலம் பெறுவதற்கு பல வசதிகள் இருக்கிறது.
பட்டா என்பது நிலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் இவை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொருந்தாது என்று சொல்லப்படுகிறது.
பட்டா எதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் ஒரு நபரின் நிலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த பட்டா ஒரு முக்கிய ஆவணமாக இருந்து, அந்த பிரச்சனை தீர்வு காண்பதற்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
பட்டாவின் வகைகள் என்ன
நில ஒப்படை பட்டா என்பது அரசின் விவசாய நிலத்தை சொந்தமாக வீடு நிலம் மனை இல்லாமல் இருப்பவர்களுக்கு இலவசமாக அல்லது பணம் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை வழங்குவது தான் நில ஒப்படை பட்டா என்று அழைக்கப்படுகிறது.
நத்தம் பட்டா என்றால் என்ன
நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு என்று பெயர் நத்தம் பட்டா என்பது தங்களுடைய வருவாய் கிராமத்தில் சொந்தமாக வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த நத்தம் பட்டா வழங்கப்படுகிறது.
அதாவது புறம்போக்கு இடத்தில் இருப்பவர்களுக்கு இந்த வகை பட்டா வழங்கப்படுகிறது.
ஏடி கண்டிஷன் பட்டா என்றால் என்ன
ஏடி கண்டிஷன் பட்டா என்பதை கிராமத்தில் உபரியாக இருக்கும் நிலத்தில் மனைகளாக பிரித்த நிலம் இல்லாத.
பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களிடம் ஒப்படைக்க வேண்டியதுதான் வட்ட ஆதிதிராவிட தாசில்தாரின் பொறுப்பு என்றும் சொல்லப்படுகிறது இதைத்தான் ஏடி கண்டிஷன் பட்டா என்று அழைக்கப்படுகிறது.
TSLR பட்டா என்றால் என்ன
TSLR பட்டா என்பது நகரத்தின் நில அளவையும் அதனுடைய பதிவேடு ஆவணத்தையும் குறித்து தான் TSLR பட்டா என்று அழைக்கப்படுகிறது.
உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய நிலத்தை யாராவது உரிமை கோரினால் அல்லது விற்பனை செய்தால் நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பட்டா சிட்டா மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
வில்லங்கச் சான்று
ஒரு நிலத்திற்கான விலங்கு சான்று என்பது 1975 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அந்த நிலம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதுதான் வில்லங்கச் சான்று.
இதன் மூலம் நீங்கள் நிலத்தின் உரிமையாளர் யார்,எப்பொழுது நிலம் மாற்றப்பட்டது,போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்