
Patta or Pathiram Some Important News in tamil
நம் நாட்டில் பெண் பிள்ளைகளுக்கும் குடும்ப சொத்தில் பங்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பின் அடிப்படையில் நிலங்கள் பிரிக்கப்படுவதில் இப்பொழுது பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது.
குறிப்பாக நிலம் ஒரு நபரின் பெயரில் இருக்கும் பட்டா வேறொரு நபரின் பெயரில் இருக்கும் இதற்கு சரியான தீர்வு என்னவென்று தெரிந்து கொள்ள முடியாது.
ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமான தகவல்களை கொடுத்து உங்களை குழப்பி விடுவார்கள்.
பட்டா சிட்டா என்றால் என்ன
வில்லங்கச் சான்று என்றால் என்ன
அடங்கல் என்றால் என்ன
வரைபடம் என்றால் என்ன
என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பட்டா சிட்டா என்றால் என்ன
பட்டா என்பது ஒரு நிலம் இவர் பெயரில்தான் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறையால் அளிக்கப்படும் ஒரு சான்று.
அதாவது பட்டா என்பது நில உரிமை ஆவணம் என்று சொல்லப்படுகிறது, அந்த பட்டாவில் யார் பெயர் இருக்கிறதோ,அவரே தற்போதைய நில உரிமையாளர் ஆவார்.
பட்ட ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், விரித்தொகை எவ்வளவு, இடத்தின் விஸ்திரம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தையின் பெயர் ஆகியவை அடங்கியிருக்கும்.
பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம் இது நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால், சொத்துக்களுக்கான சில உரிமைகளை வைத்திருப்பவருக்கு இந்த ஆவணம் வழங்குகிறது.
பொதுவாக சொத்து அல்லது வாகனத்தின் உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கு பத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
பட்ட முக்கியமா அல்லது பத்திரம் முக்கியமாஎன்ற கேள்வி மக்களிடத்தில் எப்பொழுதும் இருக்கிறது.
என்னிடம் பட்டா இருக்கிறது ஆனால் பத்திரம் இல்லை என்னிடம் பத்திரப்பதிவு இருக்கிறது ஆனால் பட்டா இல்லை இதற்கு சரியான தீர்வு என்ன.
நம் நாட்டில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட அடிப்படையில் பட்டா என்பது உரிமை மற்றும் பத்திரம் தான் முக்கியம் என்று பட்டா தேவை இல்லை என்று கூறியுள்ளது.
பத்திரம் தான் வருவாய் ஆவணங்களுக்கான ஆதாரமாக இருக்கிறது, ஒரு பத்திரத்தின் அடிப்படையில் தான் பட்டா வழங்கப்படுகிறது.
பத்திரம் மட்டும் இருக்கும் நிலம் புறம்போக்கு நிலம் என்று சொல்லலாம், அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் பட்டா இருக்கின்ற நிலம் சட்டபூர்வமான நிலம் ஆகும் அதை அரசாங்கம் கையகப்படுத்தினாலும் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
அதனால் நிலம் இருக்கிறது என்றால் அதற்கு பட்டாவும் முக்கியம் பத்திரப்பதிவு முக்கியம்.
வில்லங்கச் சான்று என்றால் என்ன
வில்லங்கச் சான்றிதழ் என்பது நமது தமிழக அரசு 1975 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை அந்த நிலத்தை பற்றிய தகவலாகும்.
குறிப்பாக நீங்கள் ஒரு நிலம் வாங்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் அந்த நிலத்தின் சர்வே எண் வைத்து வில்லங்கச் சான்று எடுத்து பார்த்தால் அந்த நிலம் எத்தனை நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
யார் பெயரில் இருக்கிறது அந்த நிலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா அந்த நிலத்திற்கு யார் ஏதேனும் மறைமுகமாக உரிமை கோர முடியுமா.
அந்த நிலத்திற்கு வாரிசு இருக்கிறதா, வாரிசு இல்லையா அல்லது தூரத்து ரத்த சொந்தம், வாரிசு இருக்கிறதா என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் நிலத்திற்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் இந்த வில்லங்கச் சான்று எடுத்து பார்த்துக் கொள்ளலாம்.
அடங்கல் என்றால் என்ன
அடங்கல் என்பது நம் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு நிலத்திற்கான சான்றிதழ் குறிப்பாக நிலம் நன்செய் நிலமா,புன்செய் நிலமா மானாவரி நிலமா என்று குறிக்கும்.
அந்த நிலத்தின் மண்ணிற்கு ஏற்ப என்ன வகையான பயிர்கள் செய்யப்படுகிறது,என்பதை குறிக்கும், இதை வைத்து நீங்கள் தமிழக அரசிடம் வேளாண் கடன்களை பெற முடியும்.
வரைபடம் என்றால் என்ன
நிலத்திற்கான வரைபடம் என்பது உங்களுடைய நிலம் எவ்வளவு உள்ளது, சதுர வடிவில் உள்ளதா, வட்ட வடிவில் உள்ளதா, நீள் வட்ட வடிவில் உள்ளதா,செவ்வக வடிவில் உள்ளதா, உங்கள் நிலத்தை சுற்றி யாருடைய சொத்துக்கள் இருக்கிறது, என்ன சர்வே எண் இருக்கிறது, என்பதை தெளிவாகக் குறிக்கும்.
TN Women Rs 1000 scheme details
வாரிசு சான்று வாங்க தேவையான ஆவணங்கள்
How to Patta Name Transfer Online in tamil
அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்