
Peoples struggle in Manipur is shocking news 2023
மாறாத மணிப்பூர் பழங்குடி வாலிபரின் தலையை துண்டித்து ஊர்வலம் எடுத்துச் சென்ற பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர் அதிர்ச்சி அளிக்கும் செய்தி..!
மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது நாடு முழுவதும் கடுமையான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்.
குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் தலையை வெட்டி ஊர்வலமாக பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர் எடுத்துச் சென்ற போட்ட வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் வசிக்கும் மைதேகி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.
இதற்கு அங்கு வசிக்கும் குக்கி பழங்குடியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த மே மாதம் 3ம் தேதி இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் கடுமையாக வன்முறையாக வெடித்து தொடர்ந்து வருகிறது கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது.
அதில் 150 நபர்கள் வரை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 50,000 மேற்பட்டவர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இதற்கிடையே கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூர் கிராமத்தில் 800 முதல் 1000 நபர்கள் கும்பல் கும்கி பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ வெளியாகி கடுமையான ஒரு அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது,இது தொடர்பாக 4 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான அமலியை நிகழ்த்தியுள்ளார்கள்.
இதற்கிடையே தான் குக்கி சமுதாயத்தை சேர்ந்த இளைஞரின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளார்கள் அந்தப் போட்ட தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
அந்த போட்டோவில் இருப்பவர் பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர் என கூறப்படுகிறது.
அதாவது மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குக்கி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
மணிப்பூரில் இன்னும் என்னென்ன சம்பவங்கள் நடந்துள்ளது என்பது மறைந்துள்ளது வருங்காலத்தில் இது தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்போது.
அங்கு கடந்த இரண்டு மாதங்களாக என்ன கொடுமையான நிகழ்வுகள் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிராக என்னென்ன நிகழ்வுகள் நடந்துள்ளது எத்தனை இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் எப்படி கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது போன்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளிவரும்.
மணிப்பூரில் இப்பொழுது தொடர்ந்தும் வன்முறை அங்கங்கே சிறிய அளவில் நிகழ்ந்து வருகிறது.
ஆளும் கட்சியான பாஜக இது தொடர்பான என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கோபமான ஒரு கேள்வியை கேட்டுள்ளது.
மொத்த இந்திய மக்களின் பார்வையும் இப்பொழுது மணிப்பூர் பக்கம் திரும்பி உள்ளது.
ஒரு மாநிலம் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறது அங்கு இரு தரப்பினர் எழுதிய கடுமையான மோதல் போக்கு நிலவுவதால் அங்கு அமைதி சூழ்நிலை எப்பொழுது நிகழும் என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
What is really happening in Manipur
How to message on WhatsApp without saving number