
Perarivalan case top points said by Supreme Court
பேரறிவாளன் இன்று விடுதலை ஆளுநரின் அதிகாரத்தை அசைத்துப் பார்த்த உச்சநீதிமன்ற டாப் விமர்சனங்கள் என்ன..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று தொடுத்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிந்தது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இந்த வழக்கு பற்றி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி தமிழக ஆளுநருக்கு எதிராகவும்.
கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்றம் வைத்தது, உச்ச நீதிமன்றம் வைத்த விமர்சனங்களை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருக்கும் பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது நீண்டகாலமாக கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது, இதை சுட்டிக்காட்டி கடந்த 2014ஆம் ஆண்டு இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
விடுதலை செய்ய வேண்டும்
இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பேரறிவாளன் கடந்த 2016ல் இது தொடர்பான மனு தாக்கல் செய்து அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அதோடு வழக்கு விசாரணை நடக்கும் இடைப்பட்ட காலத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இவர் ஒரு கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில்தான் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உள்ளார்கள்.
நீதிபதிகளின் கருத்து என்ன
இந்த நிலையில் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பின்வரும் கேள்விகளை மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எழுப்பி உள்ளார்கள்.
32 வருடமாக பேரறிவாளன் சிறையில் இருக்கிறார் இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வாதத்தை முன் வைத்தது உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்த விவகாரம் மாநில அரசு தொடர்பானது அதனால் மாநில அரசுக்கு இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் முழுமையாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டவழங்கப்பட்டு இருக்கும் சுதந்திரத்தை வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால்.
அவரின் விடுதலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு, இது இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதகமாக அமைந்து உள்ளது.
பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகாரம் அதற்கு இடையில் பேரறிவாளனின் சிக்கி தவிக்க வேண்டும் அவரை ஏன் நாங்களே விடுதலை செய்யக்கூடாது.
அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை, இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து முடிவெடுக்க போகிறோம்.
இந்த வழக்கு பெரிய விசாரணை, சதி விசாரணை நடத்தும்படி அது நடக்கட்டும் அதுவரை பேரறிவாளன் ஜாமினில் வெளி இருக்கட்டும்.
அவர் மூன்று முறை பாரெல் நீட்டிக்கப்பட்டும் எந்த தவறும் செய்யவில்லை நன்றாக செயல்பட்டு இருக்கிறார், அவர் கடந்த 30 வருடமாக சிறையில் வாழ்நாளை கழித்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் அல்லது எந்த தலைவராக இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் சட்டத்திற்கு எதிராக செயல்படக் கூடாது.
மத்திய அரசுக்கு இதில் வாதம் வைக்க எதுவும் இல்லை என்றால் நாங்கள் ஏன் இப்போது அவரை விடுவிக்கக் கூடாது.
இதில் நீங்கள் முடிவு எடுக்க அதிகாரம் இல்லை, மாநில அரசு மட்டுமே முடிவு எடுக்கும் அதிகாரம் இதற்கு முழுமையாக உள்ளது.
பேரறிவாளன் வழக்கில் 23 ஆண்டுகள் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை என்பது தெரியுமா, இப்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி விட்டார் என்கிறார்கள் ஆளுநர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இதை செய்தார்.
அமைச்சரவை முடிவு எடுத்தபின் ஆளுநர் அந்த விவகாரத்தை ஏற்கவேண்டும், ஆளுநர் அமைச்சரவையின் முடிவு கட்டுப்பட வேண்டியது இந்திய நாட்டின் சட்டம்.
சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள் என்ன..!
அதைவிடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை மேற்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா இதைப்பற்றி முதலில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
What are the foods should don’t keep in fridge
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு வகையான குற்றவாளிகளை ஆளுநர் விடுதலை செய்து இருப்பார், இது சரி என்றாலும் பேரறிவாளனை ஆளுநர் விடுதலை செய்வது சரியாகும்.