Uncategorized

Petrol and diesel prices will rise in the coming weeks

Petrol and diesel prices will rise in the coming weeks

Petrol and diesel prices will rise in the coming weeks

7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயர்கிறது இந்தியாவில் என்ன நடக்கும்..!

இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் பெரும் தடையாக எப்பொழுதும் இருப்பது கச்சா எண்ணெய் விலை தற்போது 7 வருட உச்சத்தை தொட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் எப்பொழுது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்ற கேள்வி சாமானிய மக்களிடம் எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட் 5 மாநில தேர்தல் ஆகியவை இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்துவது சாத்தியமில்லை என பல்வேறு அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கச்சா எண்ணெய் விலை 7 வருட உயர்வுக்கு செல்ல என்ன காரணம் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை என்ன நிலவரம் உலக சந்தையில் இதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

Petrol and diesel prices will rise in the coming weeks

கச்சா எண்ணெய் சந்தை நிலவரம்

கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யா உக்ரைன் பிரச்சினை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி முதல் விநியோகம் வரை பல தடைகள்  உலகத்தில் புதிதாக உருவாகி உள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் சப்ளை டிமாண்ட் பிரச்சினை அதிகமாக இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை 90 டாலர் வரையில் அதிரடியாக உயர்ந்துள்ளது இது அக்டோபர் 2014 பின்பு பதிவு செய்யப்பட்ட உச்ச விலை ஆகும்.

பெட்ரோல் டீசல் விலையில் என்ன மாற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய சந்தையில் இன்னும் எதிரொலிக்கவில்லை இதற்கு காரணம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும்.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் விற்பனை நிறுவனம் மூன்று மாதமாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்று வரை செய்யாமல் இருக்கிறது.

லாபம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தற்போது கச்சா எண்ணெய் விலை 90 டாலர் வரையில் அதிரடியாக உயர்ந்து உள்ள காரணத்தாலும் எரிபொருள் விலை உயர்த்தப்படாமல் இருக்கும் காரணத்தாலும் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் லாபம் பெரிய அளவில் பாதிக்கிறது.

ரஷ்ய அதிகப்படியான ராணுவம் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் நாட்டு எல்லையில் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அமெரிக்கா உக்ரைன்வுக்குள் நுழைந்தாள் அரசியல் மற்றும் வர்த்தகம் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்குமா

இந்த நிலையில் ஐரோப்பிய சந்தைக்கு அதிக அளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யா தான் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யா மற்றும் கிழக்கு நாடுகள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் நிலையில்.

அமெரிக்காவின் வர்த்தக தடை அறிவிப்பு வெளியாகும் நிலையில் எரிபொருள் சந்தையில் பெரிய அளவிலான தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை நிலவரம் என்ன

WTI கச்சா எண்ணெய் – 87.20 டாலர்

பிரென்ட் கச்சா எண்ணெய் – 89.91 டாலர்

மார்ஸ் கச்சா எண்ணெய் – 84.61 டாலர்

கிட்டத்தட்ட இரண்டு மாதத்தில் ஒரு பேரலுக்கு 18.7 1 டாலர் ரூபாய் உயர்ந்துள்ளது.

வீட்டில் வளர்க்க ஏற்ற குறுகிய காலத்தில் வளரக்கூடிய காய்கறிகள்

தேர்தல் முடிந்தால் கடுமையான பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது கட்டாயம் இந்தியாவில் நடக்கும்.

what are the benefits list oil pulling in tamil

ஏற்கனவே இந்தியாவில் பணவீக்கம் என்பது உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கிறது அது மட்டும்மில்லாமல் இந்த ஆண்டில் பணவீக்கத்தின் அளவு அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்பொழுது கச்சா எண்ணெய் விலை கடுமையாக வரும் வாரங்களில் உயரப்போகிறது, இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் மட்டுமே.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0