
Petrol and Diesel tax price list in tamilnadu
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை பெட்ரோல் டீசல் விலை குறைந்தது சென்னையில் எவ்வளவு மற்ற நகரங்களில் எவ்வளவு விற்பனை செய்யப்படுகிறது.
அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மூலம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வந்த பெட்ரோல் டீசலின் விலை அதிரடியாக குறைந்தது.
மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் விலை குறையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது பெட்ரோல் மீது விதிக்கப்பட்டு வரும் கலால் வரியை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் குறைக்கப்படுகிறது.
டீசல் மீது விதிக்கப்படும் வரி ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்படுகிறது.
இதன் காரணமாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு9.50 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் குறையும் என அவர் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை இந்த அளவிற்கு குறைவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதற்கிடையே பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வாட் வரியை குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
ஒருவேளை மாநில அரசுகள் வாட் வரியை குறைக்கும் பட்சத்தில் பெட்ரோல் டீசலின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் மாநில அரசுகள் இந்த கோரிக்கையை ஏற்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தால் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.
முன்னணி நகரங்களில் எரிபொருள் விலை
டெல்லி
பெட்ரோல் 96.72 டீசல் 89.62
மும்பை
பெட்ரோல் 111.35 டீசல் 97.28
கொல்கத்தா
பெட்ரோல் 106.03 டீசல் 92.76
சென்னை
பெட்ரோல் 102.63 டீசல் 94.26
பெங்களூர்
பெட்ரோல் 101.94 டீசல் 87.89
லக்னோ
பெட்ரோல் 96.57 டீசல் 89.76
விசாகப்பட்டினம்
பெட்ரோல் 111.48 டீசல் 98.27
அகமதாபாத்
பெட்ரோல் 96.63 டீசல் 92.38
ஹைதராபாத்
பெட்ரோல் 109.66 டீசல் 97.82
பட்னா
பெட்ரோல் 107.24 டீசல் 94.04
தமிழ்நாட்டில் நிலை என்ன
தமிழ்நாட்டில் இது குறித்து பாஜக கட்சி தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் திமுக அரசை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்பொழுது மத்திய அரசு மக்கள் பாதிக்கக்கூடாது என்ற வகையில் பெட்ரோல் டீசல் மீதான விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இதனை தமிழ்நாடு அரசு பின்பற்றி வாட் வரியை குறைத்து தமிழ்நாடு மக்களுக்கு நலனை அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் 8 அதிசய மூலிகைகள் என்ன..!
தமிழ்நாடு அரசின் வாட் வரி 21.46 ரூபாயாக இப்பொழுது உள்ளது இதனால் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்தும்.
Health benefits list of Omega 3 nutrition in tamil
இதனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் மீதான வரியை அதிரடியாக குறைக்க வேண்டும், என மக்கள் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.
பிரதமர் அறிவிப்பு என்ன
பாரத பிரதமர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் மக்களின் நலனே எனது அரசுக்கு முக்கியம் இதனால் பெட்ரோல் டீசல் மீதான விலை அதிரடியாக குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.