
Petrol diesel prices are likely to come down soon
நீண்ட மாதங்கள் கழித்து இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு, விலை குறைய போகிறது என்று ஒரு தகவல் கசிந்துள்ளது..!
இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை விரைவில் குறைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,எவ்வளவு ரூபாய் வரை பெட்ரோல் டீசல் விலை குறையும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
2023 ஆம் ஆண்டு தெலுங்கானா, திரிபுரா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன.
கர்நாடகா தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்கான தீவிர பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நல திட்டங்கள் போன்றவற்றை மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில்தான் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது.
ஆனால் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் குறையவில்லை அதோடு இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் வர்த்தகத்தில் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிகர லாபம் பார்த்துள்ளனர்.
இப்பொழுது மத்தியில் ஆழம் பாஜக அரசுக்கு மிகப்பெரிய தலைவலி உள்ளது அதாவது பாஜக அரசின் மீது மக்களுக்கு மெல்ல மெல்ல சற்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏனென்றால் எரிபொருளின் விலை தொடர்ந்து பல மாதங்களாக உயர்த்தப்படாமலும் குறைக்கப்படாமலும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்படுகிறது,அதேபோல் டீசல் விலையும் 95 ரூபாய் கடந்துவிட்டது மற்றும் எரிபொருள் சிலிண்டர் விலையும் 1100 ரூபாயை கடந்து விட்டது.
இதனால் மக்கள் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இதனை புரிந்து கொண்ட மத்திய பாஜக அரசு உடனடியாக விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு குறைக்கப்படுகிறது
பெட்ரோல் விலை 5 ரூபாய் டீசல் விலை 5 ரூபாயும் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் (oil companies) பிபிசிஎல் (BPCL) போன்ற நிறுவனங்களை பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் கையாளுகின்ற ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்.
எரிபொருள் விலை உயர்வு எரிபொருள் விலையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இருப்பதால் நிச்சயம் எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
வக்ர சனியால் உருவாகிறது 2 ராஜயோகங்கள்