
Petrol diesel prices more likely to fall 2023
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மோடி அரசின் முக்கிய ஆலோசனை அடுத்த திட்டம் என்ன..!
தக்காளி,இஞ்சி,மிளகாய்,வெங்காயம் சமையல் எண்ணெய், ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக ஜூலை மாதம் நாட்டில் சில்லறை வர்த்தகத்தின் பண வீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜூன் மாதம் 4.81 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் உணவு பொருட்கள் விலை உயர்வால் அதிரடியாக உயர்ந்துள்ளது என்று சொல்லலாம்.
சில்லரை விலை பணவீக்கம் உயர்வுக்கு முக்கிய பங்கு இந்தியாவில் எரிபொருள் விளையும் என்பதால்.
செப்டம்பர் மாதத்திற்குள் பணவீக்கத்தை குறைந்தது 6 சதவீதத்தில் அதாவது விலைவாசியை குறைக்க மத்திய அரசு இப்பொழுது புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே அரிசி விலையை கட்டுப்படுத்த பல்வேறு அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது.
தக்காளி நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது, கோதுமை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு ஒரு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க என்ன திட்டம்?
பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டுமெனில் எளிதாக வரியை குறைத்து சரி செய்ய முடியும்.
ஆனால் இதற்கு பின்னால் மிகப்பெரிய பொருளாதார சிக்கல்கள் இருக்கிறது.
மத்திய அரசு வரியை குறைத்தால் அரசுக்கான முக்கிய வருமானம் குறைந்து நிதி பற்றாக்குறை ஏற்படும்,இது பட்ஜெட் இலக்குகளை அடைய முடியாமல்,கூடுதல் கடன் தரும் நிலைக்கு அரசை தள்ளிவிடும்.
இந்த நிலையில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இலக்கை பாதிக்காமல் உணவு மற்றும் எரிபொருட்களின் செலவில் அதிகரிப்பை கட்டுப்படுத்த.
பல்வேறு அமைச்சகங்களில் பட்ஜெட் திட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையில் தொகையை மறு ஒதுக்கீடு செய்வதற்கு,திட்டத்தை அரசு அதிகாரிகள் தற்போது பரிசளித்து வருகிறார்கள்.
பிரதமர் எடுத்த அதிரடி முடிவு
பிரதமர் நரேந்திர மோடி வரும் நாட்களில் இது குறித்து இறுதி முடிவை கட்டாயம் எடுக்க உள்ளார்,அதாவது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி அன்று மிகப்பெரிய பரிசு வழங்க வேண்டும்மேன பிரதமர் நரேந்திர மோடி ஒரு உறுதிமொழி எடுத்துள்ளதாக பிஜேபி தரப்பிலிருந்து ஒரு தகவல்கள் கசிந்துள்ளது.
இதில் முக்கியமாக எரிபொருள் மீதான விலை குறைப்பதன் மூலம் நாட்டு மக்களிடத்தில் நல்ல பெயர் பெற முடியும் என பிரதமர் கருதுகிறார்.
சமையல் எண்ணெய்,கோதுமை மீதான இருக்கும் அதிகபட்ச வரியை தளர்த்துவது ஆகியவை அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் விலையை கட்டுப்படுத்த
இந்திய சந்தையில் நுகர்வோர் விலையை கட்டுப்படுத்த இது போன்ற பட்ஜெட்டின் மறு ஒதுக்கீட்டை 2வது முறையாக செய்யப்படுகிறது.
இந்த ஒரு லட்சம் ரூபாய் நிதியை பயன்படுத்தி எரிபொருள் மீதான விலையை குறைக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படலாம்.
அல்லது வரியை குறைத்து திரட்டப்பட்ட நிதியை முக்கிய பணிகள் அல்லது வருவாய் கொடுக்கும் திட்டங்களுக்கு செயல்படுத்தலாம்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால்,பெட்ரோல் டீசல் விலை குறைப்பதற்கு வாய்ப்புகள் அதிக சூழ்நிலை இருக்கிறது.
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால் சாமானிய மக்களுக்கு பெரும் பொருளாதார உதவியாக இருக்கும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எரிபொருள் விலையை குறைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
PM e Bus sewa scheme details in tamil 2023..!