
Petrol diesel prices will be drastically reduced soon
நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி பல மாதங்கள் கழித்து பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைய போகிறது காத்திருங்கள்..!
மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,சட்டீஸ்கர்,மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கூடிய விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து இன்னும் 8 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களில் மத்தியில் இப்பொழுது ஆட்சியில் இருக்கும் பாஜக வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறது.
இதற்காக கடந்த வாரம் எரிபொருள் சிலிண்டர் விலை அதிரடியாக 200 ரூபாய் குறைக்கப்பட்டது மற்றும் அதற்காக வழங்கப்படும் மானியம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு மத்திய அரசு இந்திய மக்களுக்காக மிகப்பெரிய ஒரு பரிசு வழங்கப்படுகிறது என்று தெரிவித்து பெட்ரோல் மீது விலை 10 ரூபாய் மற்றும் டீசல் மீது 5 ரூபாய் அதிரடியான ஒரு விலை குறைப்பை செய்தது.
இப்பொழுது 5 மாநிலங்களுக்கு தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில்.
இந்த ஆண்டு நிச்சயம் பெட்ரோல்,டீசல் மீதான விலை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என பாஜகவை சார்ந்த சில முக்கிய தலைவர்கள் தகவல்களை கசியவிட்டு வருகிறார்கள்.
இன்னும் தீபாவளி பண்டிகைக்கு சரியாக 63 நாட்கள் இருப்பதால் இந்த ஆண்டு நிச்சயம் பெட்ரோல் டீசல் மீதான விலை அதிரடியாக குறைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஏனென்றால் மத்தியிலும் மற்றும் 5 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக நிச்சயம் பெட்ரோல்,டீசல் மீதான விலையை குறைக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெட்ரோல் டீசல் மிதி எவ்வளவு விலை குறைப்பு
தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குறையலாம் என எதிர்பார்க்கலாம்,இதைவிட அதிகமாக குறைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே இல்லத்தரசிகளுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவர்கள் இன்னும் சிலிண்டர் விலை குறைப்பு மகிழ்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.
அதற்குள் பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு தகவல் வெளியாகியுள்ளது தமிழக தலைநகர் சென்னையில் இன்று செப்டம்பர் 7 ஒரு லிட்டர் பெட்ரோல் 102.66 ரூபாய்க்கு விற்பனையா கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் டீசல் ஒரு லிட்டர் 94.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது மிகவும் அதிகமான விலை என்பதுதான் அனைத்து வாகன ஓட்டிகளின் கருத்து ஆனால் கூடிய விரைவில் இந்த விலை பெட்ரோல் விலை ₹100 க்குள் வரும் என்பது உறுதி.
திராவிட மாடல் வெளியிட்ட வாக்குறுதி என்ன
திமுக அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் மீது 5 ரூபாய் விலை குறைப்பு மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்தது.
ஆனால் இந்த திராவிட மாடல் அளித்த வாக்குறுதி அனைத்தும் பொய் என்று தற்போது தெரியவந்துள்ளது,சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்பதை பற்றி யாரும் இப்போது பேசுவதை கிடையாது.
பெட்ரோலுக்கு 3 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டது,ஆட்சிக்கு வந்த புதிதில் அதன் பிறகு எந்த ஒரு தேர்தல் அறிக்கையும் இந்த திராவிட மாடல் நிறைவேற்ற வில்லை.
அதற்கு மாறாக மக்களின் மீது விலை ஏற்பு என்பது மாதம்தோறும் நடைபெறுகிறது,விடியல் அரசு என்று வாக்களித்த மக்களுக்கு விடியாத அரசாக மாறிவிட்டது திராவிட மாடல்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
1000/- கலைஞர் உரிமைத்தொகை பெண்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி..!
மின்சார பில்லை பார்த்து கதி கலங்கும் மக்கள்..!
எல்ஐசி பாலிசி காலாவதியான பின்பு மறுபடியும் புதுப்பிப்பது எப்படி..!