Uncategorized

PM Kisan installment coming on date announced

PM Kisan installment coming on date announced

PM Kisan installment coming on date announced

PM Kisan தவணைத் தொகை பணம் வரும் தேதி அறிவிப்பு..!

மத்திய அரசின் PM Kisan  திட்டத்தில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த தேதியில் 11 தவணை வழங்கப்பட உள்ளது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார் விவசாயிகள் நீண்ட நாட்களாக இந்தத் தொகைக்கு காத்திருக்கிறார்கள்.

விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற உதவும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

இந்த சிறந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி உடன் இணைந்து ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசாங்கம் ரூபாய் 2,000/- தகுதி உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவைக்கிறது.

இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணை உதவித் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

10வது தவணை எப்பொழுது வழங்கப்பட்டது

இந்தத் திட்டத்தின் 10வது தவணையை கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார்.

11வது தவணை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

பிரதமர் கிசான் சம்மன் நிதி உதவிக்கான நாடு முழுவதும் உள்ள 12.50 கோடி விவசாயிகள் இப்பொழுது காத்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி எப்போது வெளியிடுவார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

11 வது தவணை தேதி அறிவிப்பு

உண்மையில் பணம் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31ம் தேதிக்குள் வழங்கப்படும் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 11வது தவணையை மாற்றம் தேதி குறித்து அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண் அமைச்சர் இதனை செய்தியாளர்கள் வாயிலாக அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளாக ரூபாய் 6,000/- வழங்கப்பட்டு வருகிறது.

கிசான் சம்மன் நிதி 11வது தவணையை மே மாதம் 31-ஆம் தேதி பிரதமர் நாடு முழுவதும் உள்ள தகுதி உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் வங்கிக்கணக்கு வாயிலாக வழங்க உள்ளார்.

அவர் கூறியது இறுதியாக 2021 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி 2,000/- ரூபாய் மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கு அனுப்பப்பட்டது.

தற்போது இந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி கடந்துவிட்டதால் விவசாயிகள் விரைவாக பணத்தொகையை வழங்க கோரிக்கை வைத்துள்ளார்கள்.

e-KYC

இந்த முறை 11வது தவணையை பயன்படுத்த கட்டாயம் e-KYC செய்ய வேண்டியது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மது பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

12.50 கோடியில் 80 சதவீத விவசாயிகள் தங்களது e-KYC வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக அரசு அறிவித்துள்ளது.

Pal Vali Kunamaga Patti Vaithiyam enna

விவசாயிகள் e-KYC இணையதளம் மற்றும் இணையதளம் இல்லாத முறையில் e-KYC பதிவேற்றம் செய்யலாம் மேலும் வீட்டில் இருந்தபடியே Pm Kisan இணையதளத்தை பயன்படுத்தி இந்த e-KYC செயல்முறையை செய்து கொள்ளலாம்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
0