Schemes

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் PM mantri Kisan scheme money not received

PM mantri Kisan scheme money not received

PM mantri Kisan scheme money not received

PM mantri Kisan scheme இன் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் உதவி பெறுவதை உறுதிசெய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திட்டத்தின் கட்டாயத் தேவையான ஆதார் e-KYC.

கடந்த 13 வது தவணை முறையில் பல நபர்களுக்கு பணம் வரவில்லை என்ற புகார் உள்ளது,மேலும் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது பற்றி மக்களுக்கு தெரியவில்லை.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது,இப்போது 14வது தவணை வழங்குவதற்கான நேரம் நெருங்கி விட்டது,இப்போது பல நபர்களுக்கு பணம் வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்த திட்டம் தொடக்கத்தில் ஏழை எளிய விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அந்த விண்ணப்பத்தில் விவசாயிகள் நிலம் போன்ற புகைப்படங்களும் பெறப்பட்டு.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் முதல் விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக 6,000/- ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

e-KYC கட்டாயம் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்

இந்த திட்டத்தில் பல போலியான நபர்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை அரசாங்கம் உறுதி செய்தது.

அதன் பிறகு அரசாங்கம் அனைத்து விவசாயிகளும் கட்டாயம் தங்களுடைய e-KYC பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த e-KYC பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்படாமல் இருக்கும், அதற்கு உடனடியாக அவர்கள் e-KYC பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மத்திய மாநில அரசாங்க ஊழியர்கள், வருமான வரித்துறை கட்டும் நபர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், வறுமை கோட்டிற்கு மேல் இருக்கும் நபர்கள், போன்றவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது என அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது போன்ற நபர்கள் கடந்த 12 முறை இந்த தவணையை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது இது போன்ற நபர்களை அரசாங்கம் கண்டுபிடித்து அவர்களுடைய பெயரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.

e-KYC எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும்

pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றால் வலது பக்கத்தில் e-KYC என்ற தேர்வு இருக்கும்.

அதனை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுடைய ஆதார் அட்டை எண் கேட்கப்படும்.

அதை நீங்கள் உள்ளீடு செய்தால் நீங்கள் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு ஒரு கடவுச்சொல் (OTP) உடனடியாக அனுப்பப்படும்.

அதை நீங்கள் உள்ளீடு செய்தால் உங்களுடைய e-KYC வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பின்னர் திரையில் தோன்றும்.

பணம் செலுத்தாதது குறித்து புகார் தெரிவிப்பது எப்படி

நீங்கள் விவசாயம் செய்யக்கூடிய நபராக இருந்து இந்த திட்டத்தில் திடீரென்று உங்களுக்கு பணம் வர வைக்கவில்லை என்றால் நீங்கள் உடனடியாக இது குறி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.

உதவி தொலைபேசி எண்ணிற்கும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.

இலவச தொலைபேசி எண்ணிற்கும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.

Email ID : pmkisan-ict@gov.in and pmkisan-funds@gov.in

PM Kisan HelpLIne : 011-24300606,155261

PM Kisan Toll Free Number : 1800-115-526

official website : pmkisan.gov.in

PM Kisan 14th Installment release date

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ஆதார் பான் கார்டு இணைப்பு நிலையை

ஒரு ரேஷன் கடையில் இருந்து மற்றொரு ரேஷன் கடைக்கு மாறுவது எப்படி

டிக்கெட்டை ரத்து செய்யும் பொழுது முழு பணத்தை பெறுவது எப்படி

யூடியூபில் வருகிறது புதிய மாற்றம்

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0