
PMAY Scheme New Terms and Conditions in tamil
PMAY திட்டத்தின் கீழ் இனி சொந்த வீடு கிடையாது மத்திய அரசின் புதிய அதிரடி உத்தரவு..!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்கள் உள்ளன முதலாவது நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம்.
மற்றொன்று கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் இத்திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை (குடிநீர், மின்சாரம், கழிவறை, வழங்கும் வேறு சில திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வீட்டு வசதி திட்டத்திற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன.
பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் நாள் தொடங்கப்பட்டது இத்திட்டம் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும்.
வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது தான் புதிய நோக்கம்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்ந்து வீடு பெற முக்கிய தகுதியாக குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொந்தவீடு வைத்தல் கூடாது.
அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் கட்டிய வீட்டை பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு வாடகை விட்டு சம்பாதித்து வருவதாக புகார் எழுந்து உள்ளது.
இதனால் உண்மையாகவே இந்த திட்டத்தின் கீழ் உதவி தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காமல் போகிறது.
இந்த புகாரை கருத்தில்கொண்டு இப்பொழுது இதில் பல்வேறு வகையான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைப்படி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர் முதல் 5 ஆண்டுகளுக்கு அந்த வீட்டில் வசிக்கிறார் என்று தீவிரமாக கண்காணிக்கப்படும்.
அந்த வீட்டிற்கு அவர் சொந்தக்காரராக இருந்தாலும் அது குத்தகை அடிப்படையில் தான் அவர் பெயரில் பதிவு செய்யப்படும்.
5 ஆண்டுகள் கழித்து மீண்டும் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் இந்த விதிமுறையை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு குத்தகை ஒப்பந்த முடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து வீடு பறிமுதல் செய்யப்படும்.
இதுமட்டுமில்லாமல் வீட்டுக்காக பயனாளி செலுத்திய தொகையை திருப்பி கொடுக்கப்பட மாட்டாது, இந்த புதிய விதிமுறைப்படி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இலவச வீடு என்பது இனி கிடையாது.
குத்தகை அடிப்படையில் வீடு வழங்கப்படும் இந்த திட்டத்தின் பயனாளி ஒருவேளை உயிரிழந்து விட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வீடு கை மாற்றப்படும்.
அவர்களும் இந்த விதி முறைதான் கடைப்பிடிக்க வேண்டும் அவர்களுக்கு குத்தகை அடிப்படையில் வீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள PMAY திட்ட போலியான பயனாளிகள் இப்பொழுது அதிர்ச்சியாகி உள்ளார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற மோசடிகள்
மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் சரியான திட்டத்தை வகுத்து சரியான நோக்கத்தோடு செயல் படுத்திக் கொண்டிருந்தால் சில சமூக விரோதிகள்.
இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தொடங்கிவிடுகிறார்கள்.
மூளையின் செயல்திறனை பாதிக்கும் ஆபத்தான உணவு வகைகள்.
இதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது.
What is protein powder and how to use protein powder
இந்த திட்டம் மூலம் நாட்டில் பல லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர், இனிவரும் காலங்களிலும் இந்த திட்டம் அதிக அளவில் பயனளிக்கும்.