
Poli Pathiram Rathu Seivathu Eppadi in Tamil
போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி..!
நமது தமிழ்நாட்டில் நிலங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது, இதனை எப்படி சமாளிப்பது என்று கூட தமிழக அரசு மற்றும் நீதித் துறைக்கு மிக கடுமையான சவாலாக உள்ளது.
அந்த அளவிற்கு போலியான பத்திரங்கள் மற்றும் பத்திரப் பதிவுகள் நடந்துள்ளன.
போலி பத்திரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் அதிகமாக நிறைந்துள்ளன, அதை தவிர்க்க அரசாங்கம் பல்வேறு விஷயங்களை நடைமுறைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, இதனை எப்படி சமாளிப்பது என்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் ஒரே சட்டம்
ஒரே நாடு ஒரே பத்திரம் பதிவு முறை தமிழ்நாட்டிற்கு வர சற்று தாமதமாகும் என பத்திரப்பதிவு துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் போலியான பத்திரம் ரத்து செய்வதற்கும் அதற்கான மேல்முறையீடு செய்வதற்கும், தமிழக அரசு அதற்கான சட்ட திருத்தங்களை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுக்காக இப்பொழுது காத்திருக்கிறோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட பதிவாளர்கள் ஆவணங்களை ரத்து செய்யும் முறையும் இருக்கிறது, எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான அல்லது மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது 7ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மனு கொடுக்க வேண்டும்
உங்களது பெயரில் ஏற்கனவே ஒரு இடம் உள்ளது எனில் அதற்கான மூலப்பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், ஆகியவைகள் உங்களது பெயரில் இருக்கவேண்டும்.
அந்த இடத்திற்கான போலியான ஆவணங்கள் மற்றொருவர் வைத்திருக்கிறார் என்பது தெரிய வந்தால் நீங்கள் உடனடியாக மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுக்க வேண்டும்.
அதற்கு உங்களுடைய அனைத்து ஆவணங்களும் வீட்டு வரி, மற்றும் சொத்து வரி, ஆகியவைகள் கண்டிப்பாக உங்களது, பெயரில் இருக்க வேண்டும் இதனை அதனுடன் இணைக்க வேண்டும்.
நகல் எடுத்தல் என்றால் என்ன
எப்படி போலி ஆவணங்கள் வருகிறது என்றால் நில உரிமையாளர் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருப்பார்கள் அவர்கள் நீண்ட காலத்திற்கு தங்களது நிலங்களை பார்க்க வரமாட்டார்கள்.
அந்த சூழலை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் போலியான ஆவணங்களை தயாரிப்பதற்கு, அதிக வாய்ப்புகள் இருக்கிறது, சில ஏஜென்ட்கள் மூலம் அந்த போலியான ஆவணங்கள் தயாரிக்க படுகிறது.
போலியான ஆவணம் வைத்துள்ள நபர்களையும் உங்களையும் அழைத்து விசாரிப்பார்கள், அதில் தெரிந்துவிடும் யார் போலியான ஆவணங்கள் தயாரித்து உள்ளது என்று.
உங்கள் மூலப்பத்திரம், மற்றும் பட்டா, சிட்டா, சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த போலியான ஆவணங்களை ரத்து செய்வார்கள் இதற்கான மனு நீங்கள் கைப்பட எழுதுதல் வேண்டும்.
இல்லை என்றால் பத்திரம் எழுதும் நபர்களிடம் சென்று உங்கள் பிரச்சினைகளை சொன்னால் அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் எழுதுவார்கள்.
பத்திரத்தில் பிழை திருத்தம் எப்படி செய்வது
பத்திரத்தில் பிழை திருத்தும் பணிகள் உங்களது நிலையில் நீங்கள் எங்கு பத்திரப்பதிவு செய்தீர்களோ, அங்கு செல்லவேண்டும் மாவட்ட பத்திரப்பதிவு துறைக்கு செல்லக்கூடாது.
தமிழக ஆளுநர் ஒப்புதல்
தமிழகத்தில் போலி பத்திரங்கள் ரத்து செய்வதற்கான அதிகாரங்களை மாவட்ட பத்திர பதிவுத்துறை அலுவலர்களுக்கு கொடுக்கும் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to get new ration card in tamil nadu