
post mortem report of Kallakurichi student in tamil
உள்ளாடையில் ரத்தக்கரை மார்பில் காயங்கள் அதிர்ச்சிதரும் பிரேத பரிசோதனை அறிக்கை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம், விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களு,ம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதனால் கொந்தளித்த பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இதனை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறினார்கள்.
இதனால் பள்ளியில் நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் கோபத்துடன் பள்ளி அடித்து நொறுக்கினார்கள், பள்ளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுக்க கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி வருகிறார்கள்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்த நிலையில் இது கொலை என்று மாணவியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நேர்மையாக நடைபெறும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவி மரணம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை +12 மாணவி மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இருப்பினும் மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், குற்றம்சாட்டி வருகிறார்கள் இதனிடையே கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்.
இன்று அது கலவரமாக மாறி உள்ளது காரணம் பொதுமக்கள் கடும் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள்.
என்றால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல், பள்ளி குழந்தைகள் இறப்பு என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக கோயம்புத்தூர், சென்னை, போன்ற பெருநகரங்களில் இதற்கு முன்பு பள்ளி மாணவிகள் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியும் வெளியாகி உள்ளது.
பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் கோபத்துடன் வன்முறையில் ஈடுபட்டார்கள், அந்த பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீ வைத்தார்கள்.
போராட்டம் கலவரமாக மாறியது
மேலும் சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் கடும் கோபத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதனை தடுக்க முடியாமல் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் திணறினார்கள் அதுமட்டுமில்லாமல் 66 காவலர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
காரணம் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும், இடியே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் போராட்டக்காரர்கள் கற்கள் கொண்டு காவல் துறையினர் கடுமையாக தாக்கினார்கள், உடனடியாக காவல்துறை திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அதிரடி காவல்துறையை வரவழைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் காவல்துறையினர் இரண்டு முறை வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இந்த நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனையின் முதல் நிலை அறிக்கை வெளியாகி இருப்பது அதில் கடும் அதிர்ச்சி தரும் செய்திகள் இருக்கிறது.
அனைத்து காயங்களும் மாணவி உயிரிழப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பாக மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
எலும்பு முறிவு. இரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது அதேபோல் மாணவியின் மேலாடை. கால்சட்டை மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்தக்கரை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இடது தலைப் பகுதி உடைந்து இருந்ததாகவும் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதிக அளவு இரத்த போக்கு மற்றும் அதிர்ச்சியால் மாணவி உயிரிழந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் உள்ளுறுப்புகளின் இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னர் தான் மாணவி மரணம் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பள்ளி குழந்தைகள் குறி வைப்பது ஏன்
சென்ற ஆண்டு குறிப்பாக நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் இதேபோல் +12 வகுப்பு பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தார்.
சென்னையில் இணையதள வகுப்பின் மூலம் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை தெரியவந்தது.
AIAMK Party update news in tamil 2022
இப்பொழுது சின்னசேலத்தில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு என்பது பள்ளி குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது.