
Post office deposit vs sbi fixed deposit which one is best
எது சிறந்தது எங்கு வட்டி விகிதம் அதிகம் அஞ்சலகம் அல்லது வங்கியா..!
இந்தியாவில் சிறு சேமிப்பு திட்டங்கள் என்றாலே சட்டென்று நினைவிற்கு வருவது அஞ்சலகத்தில் இருக்கக்கூடிய சேமிப்பு திட்டங்கள் தான்.
அதிலும் டைம் டெபாசிட் திட்டங்கள் என்பது இன்னும் நல்ல திட்டமாக மக்களால் வரவேற்கப்படுகிறது.
இதே காலகட்டத்தில் பிக்சட் டெபாசிட் என்றால் நினைவுக்கு வருவது வங்கி அதிலும் பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்வது என்பது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இன்று நாம் பார்க்க இருப்பது அஞ்சலக டெபாசிட் திட்டங்கள் மற்றும் எஸ்பிஐ வங்கி டெபாசிட் திட்டங்கள் பற்றிதான் இவற்றில் எது சிறந்தது.
எது லாபகரமானது, எங்கு அதிகமான பணத்தை டெபாசிட் செய்யலாம், பொருளாதார நிபுணர்களின் கணிப்பு என்ன, என்று முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
எங்கு சிறந்ததாக இருக்கும்
பிக்சட் டெபாசிட் போலவே இதிலும் பணம் முடக்கப்படும் இதன் மூலம் சேமிப்பு பழக்கமும் வளரும் இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகிய இரண்டும் டெபாசிட் திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகிறது.
வங்கிகளை அடுத்து ஒரு பாதுகாப்பான சுதந்திரமான இடமாக இன்றைய காலகட்டத்தில் அஞ்சலக திட்டங்கள் மக்களால் அதிக அளவில் இன்றும் வரவேற்கப்படுகிறது.
அஞ்சலகங்களில்லும் டெபாசிட் திட்டங்கள் வங்கிகளை போலவே 5 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது, வட்டி விகிதமும் மத்திய அரசால் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது.
எனினும் இங்கு வட்டி விகிதம் என்பது 1 வருடம், 2 வருடம், 3 வருடம் 5 வருடம் என தனித்தனியாக பிரித்து பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
எஸ்பிஐ வங்கியில் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன
அஞ்சலகங்கள் அல்லது எஸ்பிஐ டைம் டெபாசிட் கணக்கு தொடங்க (know your customer) KYC பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும், அதோடு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் உங்களுடைய புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டாயம் வங்கி கணக்கு தேவைப்படும்
நீங்கள் ஏற்கனவே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்தால் இணையவழி வங்கி சேவை மூலம் எளிதாக இந்த டைம் டெபாசிட் கணக்கினைத் தொடங்கி கொள்ளமுடியும்.
இந்த டைம் டெபாசிட் கணக்கு தொடங்க சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கு அவசியம் எந்த ஒரு தனிநபரும் இந்த இரண்டிலும் டைம் டெபாசிட் கணக்கினை எளிமையாக தொடங்கிக் கொள்ளலாம்.
யார் யாரெல்லாம் தொடங்கலாம்
அஞ்சல் அலுவலகங்களில் குழந்தைகளின் பெயரில் கூட தொடர் வைப்பு நிதி கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் கணக்குகளை தாங்களாகவே பராமரித்துக் கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கியை பொருத்தவரை இரண்டு விதமான தொடர் வைப்பு நிதி கணக்குகளை பயனர்களுக்கு வழங்குகிறது, ஒன்று வழக்கமானது மற்றொன்று விடுமுறை கால சேமிப்பு கணக்குகள்.
அஞ்சலகத்தில் கொடுக்கப்படும் வட்டி விகிதம்
1 வருடம் – 5.5%
2 வருடம் – 5.5%
3 வருடம் – 5.5%
5 வருடம் – 6.7%
எஸ்பிஐ வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான வட்டி விகிதம் – 2.9%
46 நாட்கள் முதல் 175 நாட்கள் வரையிலான வட்டி விகிதம் – 3.9%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான வட்டி விகிதம் – 4.4%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.4%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் – 5%
1 வருடம் முதல் 2 வருடம் வரையிலும் – 5.1%
3 வருடம் முதல் 5 வருடம் வரையிலும் – 5.3%
5 வருடம் முதல் 10 வருடம் வரையிலும் – 5.4%
எங்கு முதலீடு செய்தால் சிறந்ததாக அமையும்
வட்டி விகிதம் என்று பார்க்கும் பொழுது அஞ்சலகத்தில் அதிகம் அதோடு அஞ்சலகங்கள் எளிமையாக அணுகமுடியும் உங்கள் அருகிலேயே இருக்கலாம்.
உடல் உறுப்புகளின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய்
குழந்தைகளின் பெயரில் கணக்கினைத் தொடங்கி கொள்ள முடியும் எனினும் அஞ்சலகத்தில் உங்கள் பணத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் மூலம் 1 லட்சம் ரூபாய் வரையில் பெற்றுக்கொள்ளமுடியும்.
LIC Jeevan Lakshya child plan full details
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கினை வைத்திருந்தாலும் 1 லட்ச ரூபாய் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என நிபந்தனை இருக்கிறது.
இதோடு வங்கிகளில் 5 லட்ச ரூபாய் வரையில் பெற்றுக்கொள்ள முடியும்.