
Post office Life Insurance Scheme details 2023
தபால் துறையில் ரூபாய் 399 செலுத்தினால் 10,00,000 வரையிலான காப்பீட்டு திட்டம்..!
நீங்கள் கட்டாயம் உங்களுக்கு மற்றும் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதம் மருத்துவத்திற்கு செலவு செய்கிறீர்கள் உங்களுடைய வாழ்க்கையில்.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ பாதுகாப்பு என்பது மிகச் சிறந்ததாக இருக்கிறது.
திடீரென்று உலகில் தோன்றும் வைரஸ் மற்றும் விபத்து தீர்க்கமுடியாத நோய்கள், என பல வகைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உங்களுக்கு உதவும்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் தனியார் துறையில் இருக்கிறது.
ஆனால் மக்கள் எப்பொழுதும் எதிர்பார்ப்பது அரசாங்கம் மட்டுமே தபால் துறையில் தற்போது மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் குறைந்தது 399 ரூபாய் செலுத்தினால் போதும் 10 லட்சம் ரூபாய் வரை உங்களால் காப்பீடு பெற முடியும்,அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நாட்டில் மக்களிடத்தில் சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தபால் துறை பல்வேறு வகையான முன்னணி சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது.
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் ஷேர் மார்க்கெட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் உங்களுக்கு பணம் திடீரென்று லாபம் அதிகமாக கிடைக்கும் அல்லது லாபம் கிடைக்காமல் போகும்.
ஆனால் தபால் துறை அலுவலக திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயம் உங்களுடைய பணம் பத்திரமாக இருக்கும் உங்களுக்கான லாபத்தொகையும் சரியான நேரத்தில் சரியாக வழங்கப்படும்.
தபால் துறை அலுவலகத்தில் சில திட்டங்களில் வரி விலக்கு உள்ளது இந்தியாவில் சிறந்த திட்டங்களில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது தபால் துறை.
மக்கள் அதிக அளவில் இந்த தபால் துறையை நம்புகிறார்கள் இப்போது ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் நடைமுறைப்படுத்துகிறது இதில் பல்வேறு விதமான சிறப்புகளும் இருக்கிறது.
தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு திட்டம்?
இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது 399 ரூபாயிலிருந்து தொடங்கப்படுகிறது அஞ்சல்துறையில் 399 ரூபாய் 10 லட்சத்துக்கான விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகமாகியுள்ளது.
வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் 399 ரூபாய் செலுத்தவேண்டும்.
விபத்து மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டமானது விபத்தில் உடல் முழுவதும் காயமடைந்த அல்லது மரணம் அடைந்தால் அல்லது விபத்தில் பக்கவாதம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இதற்கான தகுதி என்ன?
அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நீங்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் சேர உங்களுடைய அருகில் இருக்கும் அஞ்சலகத்தில் சென்று உங்களுடைய ஆதார் அட்டை மூலம் 399 ரூபாய் செலுத்தி தொடங்கிக் கொள்ளலாம்.
இதுபோன்ற சிறந்த திட்டங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நம்மளுடைய இணையதளத்தை எப்பொழுதும் பின்தொடருங்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to protect pan card aadhar card 2023
How to get token for magalir urimai thogai..!