Schemes

அஞ்சலக திட்டத்தில் மாதம் 1000 முதலீட்டில் ரூ 26 லட்சம் எப்படி பெறுவது எந்த திட்டம்…!Post office PPF Scheme details in tamil 2023

Post office PPF Scheme details in tamil 2023

Post office PPF Scheme details in tamil 2023

அஞ்சலக திட்டத்தில் மாதம் 1000 முதலீட்டில் ரூ 26 லட்சம் எப்படி பெறுவது எந்த திட்டம்…!

முதலீடு என்றாலே நம் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது அதிலும் ஓய்வு காலத்திற்கான முதலீடு  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை வயதான காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் நினைப்பது ஒரு பொதுவான விஷயம்.

ஆனால் இதனை செயல்பாட்டில் செயல்படுத்துவது என்பது மிக கஷ்டமான விஷயமாக இருக்கிறது.

ஒருவர் பொருளாதார ரீதியாக எப்பொழுதும் தயாராக இருந்தால் அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் தவிர்க்க முடியும்.

அந்த வகையில் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீட்டில் அதிகபட்சம் 26 லட்சம் பெறுவது எப்படி,எந்த திட்டத்தில் இணையலாம், என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

எந்தத் திட்டம் சிறந்தது..!

அந்தவகையில் நாம் இன்று பார்க்க இருப்பது அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்வதன் மூலம் 26 லட்சம் ரூபாய் பெற முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் மக்கள் தங்களுடைய பணத்தை அதிக அளவில் முதலீடு செய்ய விரும்பும் ஒரு இடமாக அஞ்சலகம் இருக்கிறது ஏனெனில் பாதுகாப்பு கணிசமான வருவாய் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த ஒரு பங்கமும் இல்லை, அந்த வகையில் அஞ்சலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி இத்திட்டத்திற்கு என்றுமே மக்களிடத்தில் தனி வரவேற்பு இருக்கிறது.

பொது வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன..!

இந்த திட்டம் 15 ஆண்டு கால திட்டம், இதில் வரி சலுகையும் இருக்கிறது, இதற்காக வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.1% இருக்கிறது.

இதற்கு வட்டி அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கிறது.

இந்தத் திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு பின்னரும் விரும்பினால் 5 வருடம் நீட்டித்துக் கொள்ளலாம்.

இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது,இந்த திட்டத்திற்கு வங்கி கணக்கு மூலமாக அல்லது அஞ்சல் மூலமாகவோ ஒரு நபர் இணைந்து கொள்ள முடியும்.

எவ்வளவு முதலீடு தேவை..!

உங்களுடைய பொது வருங்கால வைப்பு கணக்கில்(PPF) வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்துகொள்ளலாம்.

இதனை நீங்கள் 12 தவணைகளாக செலுத்திக் கொள்ள முடியும், ஒரு தனிநபர் கட்டாயம் 1.5 லட்சத்திற்கு மேல் செலுத்த முடியாது.

அப்படி அதிகமாக செலுத்த வேண்டுமெனில் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கணக்கினைத் தொடங்கி செலுத்திக் கொள்ளலாம் என பல கட்டுப்பாடுகள் இருக்கிறது.

அஞ்சலகத்தில் இந்தத் திட்டம் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது வயதான காலத்திற்குப் பிறகு லட்சங்களில் வருமானம் பெற முடியும்.

நீங்கள் இந்த திட்டத்தில் எவ்வளவு விரைவாக இணைந்துகொள்ள முடியுமோ அவ்வளவு நல்லது ஏனென்றால் இந்த திட்டத்தில் இளமையாக இருக்கும்போது.

இணைந்தால் அதிக அளவில் பணத்தை உங்களால் முதலீடு செய்ய முடியும் இதனால் அதிகமான பணத்தை உங்களால் பெற முடியும்.

15 ஆண்டுகள் தேவை..!

நீங்கள் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்போது நீங்கள் 1.80 லட்ச ரூபாய் முதலீடு செய்வீர்கள்.

இதற்கு வட்டி 7.1% விகிதம் என தோராயமாகக் கணக்கிட்டு கொண்டாள் நீங்கள் மொத்தம் 3.25 லட்ச ரூபாய் வயதான காலத்தில் பெறுவீர்கள்.

தேவை எனில் அதிகரித்துக் கொள்ளலாம்..!

3.25 லட்சம் இந்தத் தொகையை நீங்கள் மீண்டும் 5 தொடர விரும்பினால்,இதன் மூலம் உங்களுக்கு 5.32 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதற்கு இரண்டாவது ஐந்தாண்டு தொகுப்பின் மூலம் 5 ஆண்டுகள் அதிகரிக்கும் போது 8.24 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இப்படி தொடர்ந்து குறைந்தது 5 முறை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம், உங்களது 1,000 ரூபாய் முதலீடு ஆனது உங்களுக்கு 40 வது  26.32 லட்சம் ரூபாயாக அதிகரித்து விடும்.

இந்த முதலீட்டினை நீங்கள் இளமையான காலத்தில் தொடங்கினால் மட்டுமே இதனை நீங்கள் சாத்தியப்படுத்த முடியும் ஒருவேளை நீங்கள் தற்போது 30 வயதானவர் அல்லது 35 வயதானவர் எனில் அதற்கேற்ப முதலீட்டை நீங்கள் தொடங்க வேண்டும்.

அதற்கு முதலீடு செய்யும் தொகையும் அதிகரிக்க வேண்டும், அப்போதுதான் உங்களால் அதிகமான பணத்தை அஞ்சலகம் மூலம் பெற முடியும்.

அதிகமான பணத்தை பெறுவது எப்படி..!

உங்களுக்கு அதிகமான பணம் வேண்டுமென்றால் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை அதிகரிக்க வேண்டும் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,500,00 ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருப்பீர்கள்.

15வருடத்தில் நீங்கள் ரூபாய் 22,50,000 முதலீடு செய்து இருப்பீர்கள். தற்போதைய வட்டி விகிதம் 7.1 இதன்மூலம் வட்டி வருமானம் முதிர்வு தொகை ரூ 18,18,209 இதனை 5 வருடகாலம் நீங்கள் மேலும் நீடித்தால்.

உங்களுக்கு ரூபாய் 66,58,288 என்ற பெருந்தொகை கிடைக்கும் இதனை தொடர்ந்து நீடித்தால் உங்களது தொகையானது நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிடும்.

இந்தத் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கான பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியும்.

நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இன்றைய காலகட்டத்தில் பணவீக்கத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு இன்று உங்களுக்கு மாதம் ரூபாய் 50,000 தேவைப்படுகிறது எனில் வரும் காலங்களில் உங்களது தேவை பல மடங்கு அதிகரிக்கப்படும் எனவே உங்களது தேவை இலக்கு என அதற்கேற்ப சரியான முதலீட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் இளமையாக இருக்கும்போது முதலீடு செய்தால் மட்டுமே வயதான காலத்தில் எந்த ஒரு பொருளாதார பிரச்சனை இன்றி ஓய்வு காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

indian govt insurance scheme in tamil

Kisan Vikas Patra scheme details 2023

tn rs 1000 rupees scheme need 6 documents

August Month Planet Transit will bring change

How to check property register name in tamil

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
1
Not Sure
3
Silly
0