Schemes

அஞ்சலகத்தில் அம்சமான டைம் டெபாசிட் திட்டம் யாருக்கு ஏற்றது எப்படி தொடங்குவது..! Post Office Time Deposit Scheme Details 2023

Post Office Time Deposit Scheme Details 2023

Post Office Time Deposit Scheme Details 2023

அஞ்சலகத்தில் அம்சமான டைம் டெபாசிட் திட்டம் யாருக்கு ஏற்றது எப்படி தொடங்குவது..!

இப்பொழுது நிகழும் கால சூழ்நிலையில் பணத்தை சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது.

அதிலும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பல மக்கள் அதற்கு சரியான தீர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.

பொதுவாக ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு வழிகாட்டி உங்களுக்கு இருந்தால் மட்டுமே ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் நினைத்தது போல் பணத்தை சம்பாதிக்க முடியும்.

இது தெரியாமல் பல்லாயிரம் மக்கள் அதிக லாபம் உடனடியாக கிடைக்க வேண்டுமென்று பேராசையில் காசை ஷேர் மார்க்கெட் மற்றும் சீட் ஃபண்டுகளில் முதலீடு செய்து ஏமாந்து போகிறார்கள்.

மக்கள் பணத்தை அதிகமாக சேமிப்பதற்கு மூன்று காரணங்கள் ஒன்று தங்கள் குழந்தைகளின் படிப்பு திருமணம் ஓய்வு காலங்களில் தேவைப்படும் பணத்திற்கு இதற்கு இந்தியாவில் இப்பொழுது வங்கிகளை விட சிறந்த வட்டி  கொடுக்கும்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் உள்ளது அதிலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானது அது மட்டுமில்லாமல் சந்தை அபாயம் இல்லாமல் இருக்கிறது.

தொகை அதிகபட்சமாக முதலீடு செய்யலாம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது.

எனினும் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது மற்றும் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஒரு நபர் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து டெபாசிட் செய்யலாம் அதிக பட்சம் என்பது வரம்பு இல்லை.

வட்டி விகிதங்கள் முறை

நமது அஞ்சலகத்தில் இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் ஒரு வருட காலத்திற்கு வட்டி விகிதங்கள் – 5.5%

இரண்டு வருடத்திற்கு வட்டி விகிதங்கள் – 5.5%

மூன்று வருடத்திற்கு வட்டி விகிதங்கள் – 5.5%

ஐந்து வருடத்திற்கு   வட்டி விகிதங்கள் – 6.5%

இந்த திட்டத்தில் யார் இணையலாம்

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்

ஒரு நபர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்

குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உதவியுடன் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்

ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கும் வசதியும் உள்ளது அதிகபட்சமாக இந்த திட்டத்தில் மூன்று நபர்கள் இணைந்து கொள்ளலாம்.

போஸ்ட் ஆபீஸ் திட்டம் சிறந்தது

தற்பொழுது இந்தியாவில் முன்னணியில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் வைத்திருக்கும் திட்டங்களை ஒப்பிடும்போது அஞ்சலகங்கள் அதிக வட்டி விகிதங்கள் கொடுக்கிறது.

அதுமட்டுமில்லாமல் வங்கிகளில் பல்வேறு விதமான கணக்குகள் இருந்தாலும் அஞ்சலகத்தில் 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடங்கள் உள்ளன.

நீங்கள் 5 வருட டெபாசிட் திட்டத்திற்கு முதலீடு செய்தால் உங்களுக்கு பிரிவு 80 சி படி வரி சலுகைகளும் இதில் அடங்கும்.

ஓய்வு காலத்திற்கு என்ன நிலைமை

இந்த திட்டத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு வட்டி விகிதங்கள் கிடைக்கும் இருந்தாலும் முதிர்வு காலத்திற்கு பிறகு உங்களுக்கு டெப்பாசிட் தரப்படும்.

அதேபோல முதிர்வு காலத்திற்கு பிறகு நீங்கள் இதனை நீட்டித்துக் கொள்ளலாம்.

ஒருவேளை முன்கூட்டியே கணக்கினை நீங்கள் முடித்துக்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது ஆனால் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

எப்படி இதில் இணைவது

நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருந்தால் வங்கி புத்தகத்துடன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து.

டைம் டெபாசிட் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்,அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேறு கிளைக்கு மாற்றிக்கொள்ளலாம் இதனை.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Foods that prevent heart disease in tamil

TN provides loan assistance to start business

How to download e PAN card in tamil 2023

இந்தியாவின் சிறந்த 10 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..!

Post office best scheme details in tamil

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
1