
Power Pathiram Enral Enna in tamil 2023
பவர் பத்திரம் என்றால் என்ன?அதன் முக்கிய தேவை என்ன..!
இந்த பதிவில் பவர் பத்திரம் என்றால் என்ன என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கப்போகிறோம், அது என்ன பவர் பத்திரம் என்று உங்களுக்கு யோசனை தோன்றும்.
சொத்துகளுக்கு உரிமை செயலாளராக இருக்கும் போது உங்களால் அந்த சொத்தை சரியாக பராமரிக்க முடியாத போது அல்லது நீங்கள் சொத்துக்கள் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்தில் வசிக்கிறீர்கள் என்றால்.
அப்போது உங்களின் சொத்துக்களை வேறு ஒருவர் பார்த்துக் கொள்வதற்கு அதிகாரப்பூர்வமாக பராமரிப்பு செய்வதற்கு எழுதித்தரும் பத்திரம் தான் பவர் பத்திரம் என்பார்கள்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் என்பது அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக இங்கு வாழும் மக்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வெளிநாடு வெளி மாநிலம் போன்ற இடங்களில் சென்று பணியாற்றுகிறார்கள்.
அதுபோன்ற நபர்களின் சொத்துக்களை இங்குள்ள அரசியல்வாதிகள் அல்லது சில சமூக விரோதிகள் அவர்களுடைய பெயரில் போலி பத்திரம் செய்து பயன்படுத்துகிறார்கள்.
இது போன்ற ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதற்கு பவர் பத்திரம் பயன்படுத்தலாம்,பவர் பத்திரத்தை நீங்கள் பயன்படுத்தினால் எப்பொழுதும் உங்களுடைய நிலம் உங்களை விட்டு போகாது.
இதுபோன்ற பவர் பத்திரம் பற்றிய முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பவர் பத்திரம் என்றால் என்ன?
பவர் பத்திரம் என்றால் ஆங்கிலத்தில் பவர் ஆப் அட்டர்னி (Power of Attorney) என்று சொல்வார்கள்,அது நாளடைவில் பவர் பத்திரமாக மாறிவிட்டது, இதற்கு தமிழில் அதிகாரப் பத்திரம் என்று சொல்வார்கள்.
அதிகார பத்திரம் என்பது ஒருவருடைய சொத்துக்களை நம்முடையது என்று சொத்தின் உரிமையாளர் சொன்னாலும்.
அது உண்மையாகாது சொத்துக்கள் அனைத்தும் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் தான் சொத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்று சொல்வார்கள்.
ஒருவருடைய சொத்தின் உரிமையை மட்டும் நமக்கு அளிப்பார் அதனை அதிகார பத்திரம் என்பார்கள் அதாவது சொத்துக்களின் உரிமையை முழுவதும் இது யாருடைய பெயர்களில் உள்ளதோ.
அவர்கள் அந்த சொத்தை பராமரிக்க முடியாத பொழுது சொத்துகளின் உரிமையை மட்டும் நமக்கு அளிப்பதை பத்திரமாக மாற்றித் தருவது தான் அதிகார பத்திரமாகும்.
இந்த பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டால் மட்டுமே அது செல்லுபடியாகும்
இந்த பத்திரத்தை உருவாக்குபவர் அதாவது சொத்தின் உரிமையாளரை முதல்வர் (Principal) என்று ஆங்கிலத்தில் பெயர் குறிப்பிடுவார்.
சொத்துக்கள் உரிமையை பெறுபவரை முகவர் (agent) என்று சொல்வார்கள் ஆங்கிலத்தில் என்று அழைப்பார்கள்.
பொது அதிகார ஆவணம் என்ன?
அதிகாரப் பத்திரத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அது பொது அதிகார ஆவணம் (General Power of Attorney Meaning in Tamil) சிறப்பு அதிகார ஆவணம் (Special Power of Attorney in Tamil) என இரு வகைகளாக பிரிக்கலாம்.
சிறப்பு அதிகார ஆவணம் என்றால் என்ன?
சொத்தின் முழு உரிமையைப் பெற முடியாது சொத்தில் பெயரில் உள்ள ஏதாவது ஒன்றின் பெயரில் அதாவது குறிப்பிட்ட ஒன்றுக்கு மட்டும் உரிமை தர கூடிய பத்திரம் சிறப்பு பவர் பத்திரம் ஆகும்.
பொது அதிகார ஆவணம் என்றால் என்ன?
சொத்தின் பெயரில் நடக்கும் எந்த நடைமுறையாக இருந்தாலும் அதில் முகவர் பெயரில் நடந்தாலும், அதுதான் சொத்துக்காக பொருளாகும் என்று எழுதிக் கொடுப்பது, பதிய வைப்பது பொது அதிகார ஆவணம் ஆகும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்