
Pradhan Mantri Ujjwala Yojana Scheme Details
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா கேஸ் சிலிண்டருக்கான மானியம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது புதிய மாற்றம் என்ன..!
இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஏழை எளிய மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற புதிய நோக்கத்திற்காக.
மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை துவக்கி வைத்த நிலையில் இதில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் இணைந்து பயன் பெற்று வருகிறார்கள்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியால் உத்திரப்பிரதேசம் பல்லியானாவில் மே1 2016 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கான வாய்ப்பு தொகை உட்பட ரூபாய் 1600 மத்திய அரசு வழங்குகிறது.
இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு இலவசமாக காஸ் அடுப்பு முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நல திட்டம்.
சேமிப்பு கணக்குகளை திறப்பதற்காக ஜான் தான் யோஜனா, சுகன்யா சம்ரிதி, கணக்குகள் போன்ற மற்ற அனைத்து திட்டங்களும் இன்று வரை உள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக எல்பிஜி இனிப்புகள் வழங்கப்படுவதால் இது நமது சமூகத்தில் பின்தங்கிய பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அவர்களின் ஆரோக்கியத்தையும், அவர்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், பாதுகாக்கும்.
கூடுதலாக இது இந்த பெண்கள் விறகு, சாணம் மற்றும் பிற சமயல் எரிபொருளுக்காக செலவிடும் நேரத்தை குறைக்க உதவும்.
மேலும் உஜ்வாலா யோஜனா கிராமப்புற இளைஞர்களுக்கு, சமையல் எரிவாயு கிராமப்புற விநியோக சங்கிலியில் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இந்தத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆர்வமுள்ள தகுதியான BPL விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள LPGLPG விற்பனை நிலையம் அல்லது விநியோக மையத்திற்கு சென்று.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை கேட்க வேண்டும், விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண் தொடர்பு விவரங்கள், சேமிப்பு கணக்கியன் தொடர்பு விவரங்கள் மற்றும் கடைசியாக பக்கத்தில் உள்ள அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் விண்ணப்பதாரர்கள் 5KG அல்லது 14.2KG எரிவாயு சிலிண்டரை விருப்பம் போல் தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள்
Aadhaar Card or Voter ID Card
Bank savings account book
Proof of Residence (Telephone/Electricity/Water or Telephone Bill/House Registration Document)
Below poverty line family card
PBL certificate approved by Panchayat Pradhan with
latest passport size photograph
ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை
வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்
இருப்பிடச் சான்று (தொலைபேசி/மின்சாரம்/தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்)
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை
பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை அந்தப் பகுதியில் உள்ள எல்பிஜி அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கு பிறகு அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் விவரங்களை சரிபார்த்து தகுதி உறுதிப்படுத்திய பிறகு சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு தரவுகளுடன் அவற்றை பொருத்துவார்கள்.
விண்ணப்பதாரர் தகுதியானவர் என கண்டறியப்பட்டவுடன் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
வங்கி சேமிப்பு கணக்கு
எல்பிஜிக்கான மானியங்கள் தேவைப்படும் பெண்களின் சேமிப்பு கணக்குகளில் நேரடியாக வழங்கப்படும்.
இதனால் ஊழல் நடைமுறைகள் தவிர்க்கப்படும்,இந்த நடவடிக்கை குறிப்பாக கிராமப்புறங்களில் சேமிப்பு கணக்கு விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன
பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாக ஆகும்.
அத்துடன் சமைக்கும்போது தூய்மையற்ற புதை படிவ எரிபொருள் மற்றும் பிற எரிபொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகளை குறைப்பதும் இதன் நோக்கம்.
மேலும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் படிம எரிபொருள்களின் பயன்பாட்டில் இருந்து உட்புற மாசுபாட்டை கட்டுப்படுத்தி அசுத்தமான சமையல் எரிபொருளின் பரவலான பயன்பாட்டில் சமரசம் செய்யப்படும்,சுற்றுச்சூழலின் தூய்மை சீரழிவதை தடுப்பதே இதன் நோக்கம்.
கடந்த மார்ச் மாதம் ஒரு சிறப்பு செய்தி வெளியானது அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான மதி அமைச்சர் அவை குழு.
பிரதான் மந்திரி உஜ்வாலா பயனாளிக்கு 14.2K கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 என்று அதிகபட்சம் ஆண்டுக்கு 12 முறை எரிவாயு நிரப்புவதற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
எங்களுடன் டெலிகிராம் குழு இணைப்பில் சேரவும்
நஷ்டம் ஏற்படாத உணவு தொழில் வகைகள்..!