
Prickly pear fruit benefits list in tamil
சப்பாத்திக்கள்ளி பழம் தரும் மருத்துவ பயன்கள் என்ன
நாகதாளி எனப்படும் சப்பாத்திக்கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் மிகையாக உள்ளன.
கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயர்ந்த தரமான நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதில் விட்டமின் ஈ மிகவும் அதிகமாக இருக்கும், இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் வராமல் உடலை பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
இது வறண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது தாகம் எடுக்கும் பொழுது உடல் சோர்வை போக்கவும் உடல் வெப்பத்தை குறைக்கவும் சப்பாத்திக்கள்ளி பழம் பெரும் உதவி புரிகிறது.
பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்திக்கள்ளி சிறந்த உணவாகவும் மருந்தாகவும் இன்றுவரை இருக்கிறது.
நாங்கள் தொலைதூரம் காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கியிருக்கும் அசுத்தமான நீரை சுத்தமான நீராக மாற்ற சப்பாத்திக்கள்ளியின்.
மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து பயன்படுத்துவோம் சுத்தமான நீராக மாற்றுவதற்கு என பழங்குடியினர் தெரிவிக்கிறார்கள்.
இருளர் இன மக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் சூடுபடுத்தி குழந்தைகளுக்கு கொடுக்க பூரணமாகக் குணமாகிறது என தெரிவிக்கிறார்கள்.
சப்பாத்திக்கள்ளியின் நன்மைகள் பின்வருமாறு
சப்பாத்திக் கள்ளியின் பசையை மேல்பூச்சாக பயன்படுத்தி உடலில் ஏற்படும் வீக்கத்தை குணமாக்கலாம்.
உடலில் ஏற்படும் எந்த ஒரு கட்டியாக இருந்தாலும் இதன் உடலில் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளை கள்ளை அரைத்து இரண்டையும் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப்போட கரைந்துவிடும்.
கழுத்துப் பகுதியில் வளரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்தாக இது இருக்கிறது ஒரு நாளில் கட்டி கரைந்து விடும்.
இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த, அனைத்து வியாதிகளும் குணமாகும்.
கசா இருமல் இரத்தம் கக்குதலும் தீரும் என பண்டைய கால மருத்துவம் தெரிவிக்கிறது.
ஒருவேளை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கிவிடும் சில நேரங்களில். இதனை சுரக்கட்டி என்பவர்கள்.
இதனை தீர்க்க சப்பாத்திக்கள்ளி பழத்தைக் கொடுத்தால் உடனடியாக குணமாகும் என மற்றும் தெரிவிக்கிறது.
ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம், இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மேம்படும் என்று பழங்கால மருத்துவக் குறிப்புகளில் உள்ளது.
சப்பாத்திக்கள்ளி பழத்தில் இருக்கும் உயரமான நார்ச்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடுகிறது இதனால் உடல் பருமன் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால்தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் சில ஊட்டச்சத்து உடல் எடையை குறைப்பதற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
அது பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
சித்த மருத்துவத்தில் இதனை நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் எடை குறையும், சர்க்கரை நோயும் கட்டுப்படும் என்று குறிப்புகள் உள்ளது.
கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் எனப்படும் நோய்க்கும் இது சிறந்த மருந்தாக இருக்கிறது சித்த வைத்தியத்தில்.
சப்பாத்தி கள்ளி செடி வெப்பமண்டலக் காடுகளில் அல்லது பாலைவனங்களில் அதிக அளவில் வளர்கிறது.
மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் முழு விவரம்
இந்தச் செடியில் இலைகள் இல்லை முட்கள் அதிகளவில் இருக்கும் ஏனென்றால் இது வெப்ப மண்டலக் காடுகளில் வளர்வதால் மழை வரும் நேரங்களில் மட்டுமே.
5 Best Tips for Heating Old Food in tamil
இதற்கு தண்ணீர் கிடைக்கும் அல்லது காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருந்தால் அதன் மூலம் இது தேவையான தண்ணீரை பூர்த்தி செய்துகொள்ளும்.