
Prime Minister Narendra Modi assets details in tamil
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு சொத்து உயர்ந்துள்ளது..!
இந்திய பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது, இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூபாய் 26 லட்சம் உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விபரங்களை முழுவதும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிரதமர் மோடி தனது அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 31ஆம் தேதி தனக்கு உள்ள சொத்து விவரங்களை பகிர்ந்துள்ளார், தற்போது இது அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு சொத்து உயர்ந்துள்ளது
இதன்படி பிரதமர் மோடி சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 26 லட்சம் உயர்ந்துள்ளது.
மோடியின் சொத்து மதிப்பு ரூபாய் 2.23 கோடியாக உயர்ந்துள்ளது, பிரதமர் மோடிக்கு சொந்தமாக அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை.
அதே போல் பத்திரங்களிலும் முதலீடு செய்யவில்லை, பெரும்பாலும் வங்கிகளில் முதலீடு செய்து வைத்துள்ளார், பங்குச் சந்தையில் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் பிரதமர் மோடி முதலீடு செய்யவில்லை.
தங்க மோதிரம் எத்தனை வைத்துள்ளார்
சொந்தமாக வாகனங்கள் ஏதும் இல்லை அதே வேளையில் பிரதமர் மோடி சொந்தமாக 1.73 லட்சம் மதிப்பு கொண்ட நான்கு தங்க மோதிரங்கள் வைத்துள்ளார்.
கடந்த ஆண்டைவிட பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்கள் மதிப்பு 26.13 லட்சம் உயர்ந்து உள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தனக்கு சொந்தமாக இருந்த 1.1 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை பிரதமர் மோடி தானமாக வழங்கி இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தானமாக வழங்கிய மோடி
கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் சொத்துப்பட்டியல் 2002ஆம் ஆண்டு காந்தி நகரில் (சர்வே எண் 401/A)ஒரு குடியிருப்பு மனையே மேலும் 3 பேருடன் இணைந்து வாங்கியதாக தெரிவித்தார்.
அதன் இடத்தின் மதிப்பு சந்தை மதிப்பில் 1.1 கோடியாக இருந்தது அந்த இடத்தை பிரதமர் மோடி தானமாக வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடி தன்னிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டும் வைத்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் வங்கியில் இருக்கும் தொகையும் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 1 லட்சத்து 52 ஆயிரத்து 480 இருந்தது, இப்போது ரூபாய் 45 ஆயிரத்து 555 மட்டுமே இருக்கிறது.
சிறந்த தலைவர் என்பதை நிரூபித்துள்ளார்
பிரதமர் மோடி போல் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் இதுவரை தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை.
புரோட்டின் பவுடர் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு பிறகு மிகுந்த உயர்பதவியில் இருக்கும் ஒரு நபர் இவ்வளவு எளிமையான ஒரு வாழ்க்கையை வாழ்வது பிரதமர் மோடி மட்டுமே.
MonkeyPox in India now the symptoms in tamil
பிரதமர் மோடி தனக்கென எந்த ஒரு சொத்தையும் சம்பாதிக்கவில்லை, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தினமும் குறைந்தது 15 மணி நேரம் உழைக்கிறார்.
தமிழக தலைவர்களின் நிலை என்ன
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சித் தலைவர்களும் தனது சொத்து விவரங்களை உண்மையாக வெளியிட்டால் அது பல்லாயிரம் கோடி ரூபாயாக இருக்கும்.