
Prisoners in the Rajiv Gandhi murder case be released
7 தமிழர்கள் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை அனைத்தும் ஆளுநரிடம் இருந்து.
கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், உள்பட 7 நபர்களையும் விடுதலை செய்ய.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11-ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுநர் காலம் கடத்துவதால் அவரது முடிவுக்காக காத்திருக்காமல் தன்னைவிடுதலை செய்யக்கோரி நளினி.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்ய கோரி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்ற நபர்களும் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது முன்கூட்டி விடுதலை இதுதொடர்பாக பேரறிவாளன் மட்டுமில்லாமல் 7 பேரின் ஆவணங்களையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுவர் விடுதலை எப்போது
இதையடுத்து ஏழு நபர்கள் விடுதலை தொடர்பான கோப்புகள் எந்த தேதியில் ஆளுநரிடம் இருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது என தமிழக அரசு தெரிவிக்க உத்தரவிட்டு இருக்கிறது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நளினி தரப்பு வாதம்
நளினி தரப்பில் எம் ராதாகிருஷ்ணன் ஆஜராகி நளினியின் மரண தண்டனை தமிழக அரசாலும், பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது என வாதிட்டார்.
அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்த பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகத்தான் கருத வேண்டும் என வாதிட்டார்.
தடா சட்டம் பிரிவுகள் என்ன
மேலும் தட சட்டப் பிரிவுகளில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள நிலையில்.
இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன் என ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார், அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்.
தட சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா விளக்கமளிக்க நளினி தரப்பு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் மாதம் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஆசனவாய் புற்றுநோய் அறிகுறிகள் என்ன..!
இந்த ஏழு நபர்கள் விடுதலை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், எப்பொழுது இந்த அனைத்து நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள், என்பது ஒரு குழப்பமாக உள்ளது.
implementation of single Window system from may 1
இதைப்பற்றி விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் குரல் கொடுத்து வருகிறார்கள், ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்டார்கள்.