
Purampokku Nilam Patta Vanguvathu Eppadi
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி..!
நம் தமிழ் நாட்டில் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், அதில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் நிலம் வாங்குவது, வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய ஒரு செயலாக இருக்கிறது, அதற்கு பல லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
அரசிடம் ஏக்கர் கணக்காக புறம்போக்கு நிலம் இருக்கிறது, அரசு ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள், சிறுபான்மை சமூகத்தினர் போன்றவற்றிற்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குகிறது.
அதை எப்படி பெறுவது ஒருவேளை நீங்கள் உயர் ஜாதியில் இருந்தும் உங்களுக்கு நிலம் இல்லை என்றாலும் நீங்கள் அரசின் சலுகை மூலம் இலவச பட்டா பெறலாம்.
புறம்போக்கு நிலம் என்பது அரசுக்கு உரிமை உடையது, பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் ஆகும்.
அதாவது வேளாண்மை செய்ய முடியாத நிலங்கள், சாலைகள்,நீர்நிலைகள் போன்றவை புறம்போக்கு நிலம் என்று கூறுகிறார்கள்.
நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி
நிலத்திற்கு பட்டா வழங்கலாம் அதற்கு தமிழ்நாடு அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது அது எப்படி என்றால்.
புறம்போக்கு நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் அந்த நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம், அரசு புறம்போக்கு நிலங்களை இரண்டு வகைகளாகப் பிரித்து வைத்துள்ளது.
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் (Unobjectionable extrovert land)
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்பது கிராமத்தில் உள்ள நத்தம் நஞ்சை தரிசு பூஞ்சை போன்றவை தான்.
இதில் கிராமநத்தம் என்பது மக்கள் வசிக்கின்ற அளவிற்கு மேடான பகுதியை தான் கிராமம் நத்தம் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.
இந்த நிலங்களில் பட்டாவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம், பட்டா கொடுப்பது அரசின் முடிவு, அரசு பயன்பாட்டிற்கு என்று கருதினால் இதை கொடுக்க மாட்டார்கள்.
ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் (Objectionable outlier land)
ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் என்பது குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர்வழி நிலங்களை தான் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் என்று அரசு தெரிவிக்கிறது.
பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கு மயானம், சாலை, காடுகள், வாய்க்கால், தோப்பு, பவுண்ட், போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கேட்க இயலாது, தங்கள் கோரிக்கை இதற்கு முற்றிலும் நிராகரிக்கப்படும்.
தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நத்தம் வீட்டு மனை பட்டா இந்த புறம்போக்கு நிலம் மூலம் வழங்குகிறது.
உங்களுக்கு சொந்த வீடு கூட இல்லை அல்லது வீடு கட்டுவதற்கு நிலம் இல்லை என்றால் நீங்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம்
நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்கும்
இதுவரை தமிழகத்தில் விண்ணப்பித்த 90 சதவீத மக்களுக்கு நத்தம் வீட்டு மனை பட்டா புறம்போக்கு நிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை பல லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் நீங்களும் இதனை பயன்படுத்தலாம்.
உங்களுடைய முழு விவரங்களையும் உங்களுக்கு நிலம் இல்லை என்ற ஒரு சான்றிதழ்களையும் நீங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் கையப்பம் பெற்று.
இதனை உங்கள் பகுதியில் இருக்கும் தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் நிச்சயம் உங்களுக்கு நத்தம் வீட்டு மனை பட்டா கிடைக்கும்.
Pink WhatsApp scam is rising now 2023
அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
LIC Saral pension scheme best tips