
Rahu ketu peyarchi rasi palangal rishaba 2023
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 யாருடைய வீட்டில் பண மழை பொழிவு வெளிநாடு யோகம் யாருக்கு காத்துக் கிடக்கிறது..!
கேது பகவான் ஞானத்தை கொடுப்பார்,ராகு பகவான் அள்ளிக் கொடுப்பார் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ராகு கேது கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியிலும் இடம்பெயர்ச்சி அடையப்போகின்றன.
அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்கு பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது, இந்த கிரக பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
ராகுவை போல கொடுப்பதும் இல்லை, கேதுவை போல கெடுப்பதும் இல்லை என்பார்கள், யோகாதிபதி ராகு மோட்சக்காரன் கேதுவும் நிழல் கிரகங்கள்.
கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார் ராகு பகவான் அள்ளிக் கொடுப்பார், ராகு ஆசைக்கு கரககாரர் கேது மோட்சத்திற்கு கரககாரர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது.
இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கிறார்களோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ,அதனுடைய பலன்களை செய்வார்கள் கன்னி ராசி அதிபதி புதன், கேது பகவான் புதன் பகவான் போல செயல்படுவார்.
மீனம் குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு குரு பகவான் போல ஆன்மீகத்தை அளிப்பார்.
ரிஷப ராசிகாரர்களே நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றி காரமாக முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள் இது நாள் வரை 12-ம் வீட்டில் விரயத்தில் அமர்ந்திருந்த.
ராகு லாப ஸ்தானமான 11 வது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆவதால் எதிர்பார்த்த வியாபாரத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார்.
போட்டி பொறாமைகளை முறியடிப்பீர்கள் அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவித்தீர்கள் இனி தானாக மறைந்து விடும்.
என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்
இந்த நாள் வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி வேகமாக முடியும், திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடிவரும்.
சிலருக்கு பிள்ளை பாக்கியம் வந்து சேரும் குலதெய்வ பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள், வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும்,சொத்து வழக்குகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும்.
எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த தம்பதியர் இடையே இனி வரும் காலங்களில் ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகள் எல்லோரும் மகிழ்ச்சியாக செய்திகளை சொல்வார்கள்.
குடும்பத்தில் நிலவும் அமைதியும் சந்தோஷமும் உங்களின் பயணத்தை வெற்றி பெற நோக்கி இழுத்துச் செல்லும்.
பாகப்பிரிவினை சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும் உடல் நிலையும் உற்சாகமாக இருக்கும்.
மோட்ச காரகன் கேது இதனால் வரை உங்கள் ராசிக்கு 6ம் வீடான ரோக சத்து ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் இனிப்பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 வருவது யோகம்தான்.
சொந்த வீடு வாங்கும் யோகம் வந்துவிட்டது, அதற்கு ஏற்ப வருமானமும் அதிகரிக்கும், ஆன்மீக பயணம் செல்வீர்கள், தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.
புத்திர பாக்கியம், தெய்வ அருள் புண்ணியம், ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும்.
ஆண்களுக்கான மருத்துவ குறிப்பு பட்டியல்கள்..!
தாய் வழி உறவினர்களுடன் கோபத்துடன் பேசாமல் இருப்பது நல்லது, புதிய முயற்சிகள் கைகூடும்,புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும், இதுவரை உங்களை தர குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்.
5 best investment plan in tamil
தடைப்பட்ட திருமணங்கள் வேகமாக நடைபெறும் சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும், செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் ஏற்படும்.
கடன் சுமை குறையும் பணத்தால் நண்பர்கள், உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது, கவனமாக இருக்கவும்.