
Rajesh Suicide due to online loan app 2023
நிர்வாண போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் அவமானம் தாங்காமல் இளைஞர் தற்கொலை நடந்தது என்ன..!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே இணையதளம் மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் அவருக்கு வயது 27 இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை அழுத்தியதன் மூலம் அது நேராக ஒரு கடன் செயலிக்கு சென்றது இதனால் தனது தேவைக்காக ராஜேஷ் கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் வாங்கிய கடனை வட்டி அசலுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே திருப்பி செலுத்தியுள்ளார்.
ஆனாலும் இணையதளம் மூலம் வழங்கிய நிறுவனத்தின் வாட்ஸ் அப் மூலம் ராஜேஷை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் வந்து ராஜேஷை வீடியோ எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது இதன் பின்னர் ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து.
அதை நிர்வாணமான ஒரு உடலுடன் ஒட்டி அதை காட்டியும் ராஜேஷை மிரட்டியுள்ளார்கள் ஆனால் ராஜேஷ் எல்லா பணத்தையும் கொடுத்த பிறகு மீண்டும் எதற்காக பணம் கேட்கிறீர்கள்.
நான் தான் பைசா பாக்கி இல்லாமல் கட்டி விட்டேன் மீண்டும் பணம் கேட்டால் செலுத்த முடியாது என்கிறார்.
இதனால் ஆக்கிரமடைந்த இணையதள நிறுவனத்தினர் ராஜேஷின் உறவினர்களுக்கெல்லாம் நிர்வாண புகைப்படத்தை அனுப்பி உள்ளார்கள்.
இதையடுத்து சொந்தக்காரர்கள் ராஜேஷை ஒரு மாதிரியாக அசிங்கமாகவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த ராஜேஷ் மீட்ட உறவினர்கள்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் அவரசர சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள் அப்போது ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
இதன் பிறகு தகவல் அறிந்து வலங்கைமான் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் இந்த நிலையில் ராஜேஷ் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில்.
அவருக்கு வந்த whatsapp கால் அனைத்துமே தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது தெரிய வந்தது இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.
தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் இணையதள ரம்மியால் நிறைய நபர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில்.
தற்போது இணையதள கடன் மூலம் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தமிழ்நாட்டில் இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Morning drinks to lower bad cholesterol
How to change Passport photo in tamil
How to renew your old Passport in online 2023