
Rajinikanth becomes governor full details in tamil
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவர்னர் ஆகிறார்?சிறிய மாநிலத்திற்கு முழு விவரம்..!
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசிவிட்டு பிறகு.
அடுத்த வேலையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது பலவிதமான சந்தேகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது.
திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாஜக கட்சியுடன் அதிகம் நெருக்கம் காட்டுகிறார், முக்கியமான தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
அதுவும் செய்தியாளர்களிடம் அரசியல் பற்றி தான் பேசினேன் அதைப் பற்றி உங்களிடம் சொல்ல முடியாது என்று வெளிப்படையாக தெரிவிக்கிறார்.
என்பது தமிழக அரசியலில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டுமில்லாமல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இது என்ன மாதிரியான தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
இப்பொழுது திமுக, அதிமுக, என்ற இரு பெரும் கட்சிகள் சரியான தலைமை இல்லாமல் திண்டாடி வருகிறது.
இந்த நிலையை சரியாக பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் நுழைவதற்கு அனைத்து விதமான வேலைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
உண்மையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் தமிழக ஆளுநரை சந்தித்ததில் என்னதான் நடந்திருக்கும் என்று கேள்வி திமுக மற்றும் அதிமுக கட்சிகளிலும் எழுந்துள்ளது.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை.
மேலும் அதிகளவில் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக மேலிடத் தலைவர்கள் மிக மிகத் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தமிழக பாஜக தலைவர் திருஅண்ணாமலைக்கு, தமிழகத்தில் நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்,என்ன மாதிரியான அரசியல் வேண்டுமானாலும் செய்துக்கொள்.
அதைப்பற்றி கவலை இல்லை உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பாஜக தலைமையிடம் குரல் கொடுக்கும் என்ற அறிவிப்பு அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அண்ணாமலை ஆளும் திமுகவைப் பற்றி கடுமையான விமர்சனங்களை தினந்தோறும் முன்னெடுத்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் மற்றும் அவருடைய மகன் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை தினந்தோறும் வைக்கிறார்.
திமுக அரசுக்கு இது ஒரு மிகப்பெரிய நெருக்கடி, திமுக அரசு அண்ணாமலை மீது எந்த ஒரு வழக்குகளையும் தொடர முடியவில்லை.
அண்ணாமலை தினம்தோறும் பேசுவது அதிகமாகிறது, திமுகவால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது, ஒரு பரிதாப நிலையை ஏற்படுத்தியுள்ளது திமுகவிற்கு.
ரஜினியின் மறைமுக அரசியல் தொடங்கிவிட்டது
பிரதமர் நரேந்திர மோடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விரும்புவதாகவும்.
உள்துறை மந்திரி அமித்ஷா அதை விரும்பவில்லை என்றும் கூட சில தகவல்கள் பாஜக வட்டாரத்தில் வெளியாகியுள்ளன.
ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தால் போதும் என்று கூட பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்காக ரஜினிகாந்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பாஜக மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்களாம்.
தற்போது சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாக உள்ளது சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைப்பதற்கு ரஜினியிடம் பேசப்பட்டு வருகிறதாம்.
இதைப் பற்றி சமீபத்தில் ஒரு வார இதழில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கான புதிய ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல் மாடல்கள்..!
டெல்லி வட்டாரத்தில் ரஜினியை ஒரு சிறிய மாநிலத்திற்கு கவர்னராக அமர வைப்பதற்கு உறுதியாக இருக்கிறார்களாம்.
தமிழக மக்களின் மனநிலை என்ன
அரசியலைப் பொருத்தவரை ரஜினிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லை, அது முடிந்து போய்விட்டது.
தமிழக மக்கள் ஆதரிக்கும் மனநிலையில் இல்லை,ரஜினியை இப்பொழுது அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கண்டு கொள்வதில்லை என்றாலும்.
5G Jobs and price some details in tamil
ரஜினியை முன்னிறுத்தி ஏதோ ஒரு அரசியல் அலையே தமிழகத்தில் உருவாக்கி, அதன் மூலம் வெற்றி வாகை சூட வேண்டும் என பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
ரஜினிகாந்த் கவர்னர் குறித்த அறிவிப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு விரைவில் வெளியாகும் என்ற ஒரு அறிவிப்பும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.