Uncategorized

Rajnath Singh held an emergency meeting on the Agnipath

Rajnath Singh held an emergency meeting on the Agnipath

Rajnath Singh held an emergency meeting on the Agnipath

அக்னிபாத் வன்முறை முப்படை தளபதிகளுடன் அவசரமாய் ஆலோசித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் முப்படை தளபதி உடன் மிக அவசர ஆலோசனை நடத்தினர்.

இதில் அக்னிபாத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு, சவால்கள், குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறையில் உள்ள முப்படைகளில் அக்னிபாத் திட்டத்தில் ஆட்கள் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜூன் 14-ஆம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி திட்டத்தில் 4 ஆண்டுகள் வரை பணி செய்ய முடியும் அதன் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே தக்க வைக்கப்படுவார்கள் 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது, அதிகபட்சமாக 11 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இளைஞர்கள் கடும் போராட்டம்

இதுபற்றி அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிக்கையில் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர விரும்பிய இளைஞர்கள் கொரோனா வைரஸ் காரணமாக சேர முடியவில்லை.

இனி அக்னிபாத் திட்டத்தில் முப்படைகளுக்கும் ஆள்சேர்ப்பு நடக்கும் என்றார்.

இதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது பீகார், உத்தரபிரதேசம், டெல்லி, உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் உருவாகி வன்முறை வெடித்தது.

இதனால் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகிறது.

அவசர ஆலோசனை நடத்தினார்

இந்த நிலையில்தான் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கடற்படை தளபதி, விமானப்படை தளபதி, ராணுவ தளபதி, இதில் பங்கேற்றார்கள் இவர்கள் மூன்று பேருடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஏற்படும் சவால்கள், அதனை சந்திப்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை செய்யும் தேதி பற்றிய ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து அறிவிக்கப்படும் சலுகைகள் என்ன

இதற்கு இடையே தான் அக்னிபாத் வீரர்களுக்கு தொடர்ந்து சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதாவது அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய நபர்களுக்கு மத்திய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்திருந்தார்.

அதற்கு முன்பு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும், முதல் பேட்சுக்கு 5 ஆண்டாகவும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆள்சேர்ப்பு எப்பொழுது

இந்த நிலையில் விரைவில் ராணுவத்தில் அக்னி பாடத்திட்டத்தில் ஆள்சேர்ப்பு தேதி வெளியாக உள்ளது.

காமசூத்ரா கூறும் அடிப்படை பாலியல் ரகசியங்கள் என்ன?

அதே நேரத்தில் விமானப்படை ஜூன் 24 முதல் இந்த திட்டத்தில் ஆள்சேர்ப்பு நடவடிக்கை துவங்கும் என அதன் தளபதி ஆர் சவுத்ரி நேற்று அறிவித்து இருந்தார்.

Heart attack symptoms jaw pain in tamil

இதேபோல் விரைவில் கடற்படையில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0