
Ration Card Apply Document List in Tamil
புதிய ரேஷன் கார்டு வாங்கப் போகிறீர்களா? இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எப்படி விண்ணப்பம் செய்வது..!
நீங்கள் உங்களுடைய ரேஷன் கார்டை தவறுதலாக தொலைத்து விட்டால் பதற்றப்பட வேண்டாம்.
நீங்கள் மறுபடியும் புதிய ரேஷன் கார்டு பெற்றுக் கொள்ள முடியும் இதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது.
என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை பற்றி தான் இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாக தமிழக மாநில அரசால் கருதப்படுகிறது.
ஏழை எளிய மக்கள் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும்.
தவறவிட்ட ரேஷன் கார்டு பெறுவது எப்படி
நீங்கள் உங்களுடைய குடும்ப அட்டையை தவறுதலாக தொலைத்து விட்டீர்கள் அல்லது குடும்ப அட்டை உடைந்து விட்டது என்று ஒரு பிரச்சனை வரும் பொழுது.
உடனடியாக புதிய குடும்ப அட்டை எப்படி பெறுவது, என்னென்ன ஆவணங்கள் தேவை, எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும், எவ்வளவு ரூபாய் தேவைப்படும்.
எப்பொழுது மறுபடியும் புதிய குடும்ப அட்டை கிடைக்கும், போன்ற அனைத்து விதமான தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அட்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்
பழைய புத்தகத்தில் PDS நகல், குடும்பத் தலைவரின் புகைப்படம் மற்றும் வசிப்பிட சான்று கட்டாயம் தேவைப்படும்.
வசிப்பிடத்திற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்று
ஆதார் அட்டை
கடவுச்சீட்டு
சொந்த வீடு என்றால் சொத்து வரி செலுத்தியதற்கான சான்று
குத்தகைதாரர்களுக்கான வாடகை ஒப்பந்தம்
குடிசை அகற்றும் வாரியம் ஒதுக்கீடு உத்தரவு
தொலைபேசி பில்
வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல்
தொலைபேசி கட்டணம் செலுத்திய ரசீது
எரிவாயு நுகர்வோர் பில்
மின் கட்டண ரசீது
வாக்காளர் அடையாள அட்டை
Lease agreement for landlords
Slum Clearance Board Allotment Order
Telephone bill
Copy of first page of bank account book
Telephone bill payment receipt
Gas Consumer Bill
Electricity bill receipt
Voter ID card
எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்
உங்களுடைய ரேஷன் அட்டை தொலைந்து விட்டது அல்லது உடைந்து விட்டது என்றால்.
நீங்கள் உடனடியாக உங்கள் பகுதியில் ரேஷன் அட்டை ஏற்கனவே வழங்கிய அரசாங்க அலுவலகத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் சரியாக கொடுத்தால்.
ஒரு மாதத்திற்குள் உங்களுடைய புதிய குடும்ப அட்டை பெற்றுவிட முடியும்.
முதலில் நீங்கள் குடும்ப அட்டை சம்பந்தமான அரசு அலுவலகத்திற்கு சென்றால் உங்களுடைய குடும்ப அட்டை எப்பொழுது, எந்த தேதியில், எந்த கிழமை ஆகியவற்றுடன் குடும்ப அட்டை தொலைந்து விட்டது என்பது குறித்து ஒரு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
உங்களுடைய குடும்ப அட்டை இரண்டாக உடைந்து விட்டது என்றால் அந்த உடைந்த அட்டையும் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்ப அட்டை தொலைந்து விட்டால் இணையதளத்தில் உங்களுடைய குடும்ப அட்டையை நகலெடுத்து அதை குடும்ப அட்டை வழங்கும் அரசு அலுவலகத்தில் சமர்ப்பித்தால்.
அவர்கள் தற்காலிகமாக 10 இலக்க எண்களை உங்களுக்கு வழங்குவார்கள்.
அதன் மூலம் நீங்கள் ரேஷன் கடையில் எப்பொழுதும் வாங்குவது போன்ற அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
Related Posts :
ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் கார்டு பயன்படுத்த முடியாது
அடிவயிற்றில் இருக்கும் விடாப்படியான கொழுப்பை கரைக்க
ஆயுள் முழுவதும் மாதம் தோறும் 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும்