Uncategorized

Ration Card new rules and regulations in tamil

Ration Card new rules and regulations in tamil

Ration Card new rules and regulations in tamil

ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சமா?ரேஷன் அட்டை கிடையாது வருகிறது புதிய விதிமுறைகள்..!

ரேஷன் அட்டை தொடர்பான புதிய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன, இதன்படி உங்கள் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரேஷன் அட்டை பெற தகுதி இல்லை.

இதன் அடிப்படையில் தகுதி இல்லாத ரேஷன் கார்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என வெளிப்படையாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பிரச்சினையின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுகள் பல மாதங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் அரசின் இலவச ரேஷன் பொருட்களை தகுதி இல்லாத பல லட்சக்கணக்கான நபர்கள் தவறாக பயன்படுத்தியது அரசின் கவனத்திற்கு வந்தது.

இதனால் தகுதி உடையவர்களுக்கு சரியான உதவி கிடைக்காமல் போகிறது.

கடும் நடவடிக்கை தேவை

இவ்வாறு தகுதி இல்லாமல் இருப்பவர்கள் ரேஷன் உணவுப் பொருட்களை வாங்கி அதை வெளியில் விற்பது அல்லது அதை வீணாக்குவதை விட.

அதுபோன்று இருக்கும் நபர்கள் முன்வந்து ரேஷன் அட்டையை ரத்து செய்துவிட வேண்டும், என்று அரசு தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உங்கள் ரேஷன் அட்டையை நீங்கள் ரத்து செய்யாவிட்டால்.

சரிபார்ப்புக்கு பிறகு உணவுத்துறை குழு அதை ரத்து செய்துவிடும் அப்படிபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புதிய விதிகள்

ரேஷன் அட்டை வைத்திருக்கும் நபர்கள் தனது சொந்த வருமானத்தில் குறைந்தபட்சம் 100 சதுர மீட்டர் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது வீடு.

நான்கு சக்கர வாகனம், டிராக்டர், ஆயுத உரிமம், குடும்ப வருமானம் கிராமப்புறங்களில் ரூபாய் 2 லட்சத்திற்கும் நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால்.

அத்தகைய நபர்கள் ரேஷன் பெற தகுதி இல்லை அவர்கள் தங்களது ரேஷன் அட்டையை தாலுகா மற்றும் டி எஸ் ஒ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்

அரசு விதிமுறைகளின்படி ரேஷன் கார்டு தங்களது ரேஷன் அட்டையை ஒப்படைக்க வில்லை என்றால் ஆய்வுக்குப் பிறகு அத்தகைய நபர்களின் அட்டை ரத்து செய்யப்படும்.

இதனுடன் அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அதுமட்டுமின்றி அப்படிப்பட்டவர்கள் வாங்கியவர் பொருட்களும் பறிமுதல் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்கள் அதிகரிப்பு

அரசுக்கு ரேஷன் அட்டை உணவு வழங்குதல் மூலம் பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது, இது ஒரு சிறந்த திட்டமாகும்.

ஆனால் தகுதி இல்லாத நபர்கள் இதனை அதிகம் பயன்படுத்துவது அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்த திட்டத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தினால் இன்னும் தரமான உணவு பொருட்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை அரசால் மக்களுக்கு வழங்க முடியும்.

நம் நாட்டில் பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் சாலை அருகில் வசிக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் ரேஷன் உணவுப் பொருட்களை அதிகம் நம்பி உள்ளார்கள்.

இத்தகைய அடித்தட்டு ஏழை எளிய மக்களுக்கு ரேசன் உணவுப்பொருட்கள் கட்டாயம் தேவைப்படுகிறது.

ஒரே இந்தியா ஒரே ரேஷன் கார்டு

சில ஆண்டுக்கு முன்பு மத்திய அரசு இந்தியாவில் உள்ள ஏழை-எளிய ரேஷன் அட்டை பயன்படுத்தும் மக்கள் எங்கு வேண்டுமானாலும்.

மூளை காய்ச்சல் அறிகுறிகள் என்ன..!

எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான திட்டத்தை கொண்டு வந்தது.

Best mileage bikes 2022 in tamil

இப்பொழுது அதில் ஆதார் கார்டு எண்கள் இருந்தால் மட்டுமே போதும் ரேஷன் பொருட்கள் பெற தகுதி உள்ளவர்கள் என அறிவித்துள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
2
Silly
0