
Rava gulab jamun seivathu eppadi in tamil
சுவையான ரவா குலோப்ஜாம் செய்வது எப்படி..!
எப்பொழுதும் இனிப்பு சுவைக்கு அதிகமான வரவேற்பு மக்களிடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இனிப்பு சுவை என்றால் லட்டு, வீட்டில் செய்யக்கூடிய பலகாரம், இதற்குமேலும் குலோப்ஜாம் தனியாக ஒரு சுவை கூட்ட கூடியதாக இருக்கிறது.
இதைப் பிடிக்காத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு இதனுடைய சுவை சிறந்ததாக இருக்கும்.
வீட்டில் விசேஷம் என்றால் பிடித்த உணவை செய்வோம் அதற்கு சுவை அதிகரிக்க பல்வேறு விதமான செய்முறைகளை செய்வோம்.
இப்போது ரவையை பயன்படுத்தி வித்தியாசமாக ரவை ஜாமுன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இந்த வித்தியாசமான ரவா ஜாமுன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக கண்டிப்பாக இருக்கும்.
சுவையான குலோப்ஜாம் செய்ய தேவையான மூலப்பொருட்கள்
சர்க்கரை – 200 கிராம்
எண்ணெய் -1/2 லிட்டர் அல்லது தேவையான அளவு
குங்குமப்பூ – சிறிதளவு போதும்
ஏலக்காய் -3 அல்லது 5
எலுமிச்சை பழம் – 1/2 பழம்
நெய் – 2 டீஸ்பூன்
தண்ணீர் -1 1/2 கப்
ரவா – 100 கிராம்
பால் – 3 கப்
சுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை 1
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைக்க வேண்டும்
பாத்திரம் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ள வேண்டும், பின்பு அவற்றில் ஒரு கப் ரவை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
ரவா குலோப்ஜாம் செய்யும் முறை 2
பின்பு அவற்றில் மூன்று கப் பால் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
இந்த கலவையை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும், அதாவது பால்கோவா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கலவை கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறிய பிறகு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு உங்களுக்கு தேவையான அளவில் சிறு சிறு உருண்டையாக உருட்டி தனித்தனியாக அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரைப்பாகு எப்படி தயாரிப்பது
200 கிராம் சர்க்கரை எடுத்துக் கொள்ளவேண்டும் அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
சர்க்கரை நன்றாக கரைந்ததும் பிறகு அவற்றில் நீங்கள் ஏற்கனவே நசுக்கி வைத்துள்ள ஏலக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து அடுப்பிலிருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ரவா குலோப்ஜாம் செய்யும் முறை 3
ஏற்கனவே நீங்கள் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
குண்டர் தடுப்பு சட்டம் என்றால் என்ன
பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைத்தால் போதும், நீங்கள் விரும்பியது போல், சுவையான சிறந்த ரவர ஜாமுன் தயாராகிவிடும்.
இதை 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை வயிற்றில் சாப்பிடலாம்.
Best health nutrition for pregnant women in tamil
இதில் குங்குமப்பூ சேர்ப்பதால் உங்களுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மற்றும் சுவையான குலோப்ஜாம் கிடைக்கும்.
இதில் ஏலக்காய் சேர்ப்பதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வராது.