Uncategorized

Readymade garments manufacturing business in tamil

Readymade garments manufacturing business in tamil

Readymade garments manufacturing business in tamil

சுயதொழிலில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

சுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு பல ஆண்டுகளாக ஜவுளித் தொழிலில் அதிகமான லாபம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது, அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை.

நமது ரெடிமேட் ஆடைகள் வாங்காத நாடுகளே இல்லை ஆனால் அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் எடுக்க வேண்டும்.

அந்த ரிஸ்க்குகளை தாண்டி சமாளித்து நின்றுவிட்டால் போதும் நீங்களும் ஒரு சிறந்த தொழிலதிபர் ஆகி விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

ரெடிமேட் ஆடைகள் நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம் அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஆர்டர் வாங்கி அதை தயாரித்து கொடுத்தால் அதிக லாபம் பெற முடியும்.

இந்த தொழிலுக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு இருந்தாலும் இங்கு தயார் செய்யப்படும் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதால் நல்ல சந்தை வாய்ப்புகள் இருக்கிறது.

கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில் தான் இந்த தொழில் தொடங்க முடியும் என்ற கருத்து பல நபர்களிடம் இருக்கிறது.

ஆனால் உண்மை என்னவெனில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறைய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது.

டெக்ஸ்டைல் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.

Readymade garments manufacturing business in tamil

சுய தொழில் இயந்திரங்கள் முழு விவரம்

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு ரெடிமேட் டிசைன் கடை துவங்க தேவையான இயந்திரங்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம்.

இதற்கான டீலர்கள் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, போன்ற நகரங்களில் இருக்கிறார்கள்.

அவர்கள் மூலம் இந்த இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் தனித்தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களை ஒருங்கிணைத்து செய்து கொடுத்துவிடுவார்கள்.

இதற்கு தேவையான முதலீடு

இந்த ரெடிமேட் டிசைன் கடை தொழில் தொடங்குவதற்கு நிலம் மற்றும் கட்டிடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்து செய்யலாம் இந்த தொழில் தொடங்குவதற்கு மொத்தம் 80,000/- ரூபாய் தேவைப்படும்.

இந்தத் தொழில் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் வரை அரசு மானியம் கிடைக்கும்.

இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.

சுயதொழில் தயாரிக்க முன்

பிளீச்சிங், பிரின்டிங், செய்யப்பட்ட காட்டன் சிந்தெடிக், துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும் அல்லது அதிக அளவு இருப்பு வைக்க வேண்டும்.

நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!

துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா, கலர் எப்படி இருக்கிறது, அல்லது வேறு வகையில் சேதம் ஏற்பட்டிருக்கிறது, என்பதை ஆய்வு செய்த பிறகே தைப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

நமது தயாரிப்பில் ஏதாவது குறைபாடு இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடம் வந்து சேரும், இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில் தரத்தில் எப்போதும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

What is the law of partition in tamil

பள்ளி கல்லூரி, மருத்துவமனை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசியல் கட்சி, போன்ற இடங்களில் நீங்கள் ஆர்டர் எடுத்தால் மிகப் பெரிய அளவில் பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0