
Real Estate vs Gold which is best in 2023
தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் துறையை எது சிறந்தது முதலீடு செய்வதற்கு..!
இன்றைய காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப்பது அவ்வளவு எளிதானதுயல்ல அதைவிட சம்பாதித்த பணத்தை சேமிப்பது மற்றும் அதை பெருக்குவது என்பது.
ஒரு சில நபர்களால் மட்டுமே செய்ய முடிகிறது, ஏனெனில் சம்பாதித்த பணத்தை சரியான வழியில் சேமிப்பது அல்லது முதலீடு செய்வதுதான், உங்களுடைய பொருளாதார நிலைமையை மேலும் அதிகரிக்கும்.
உங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வகையான புதிய முயற்சிகளை எடுத்தால் மட்டுமே பணம் சம்பாதிப்பது தொடர்பான புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ள முடியும்.
அதன் மூலம் எதில் முதலீடு செய்தால் அதிகமான வருமானம் பெற முடியும் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும், அது உங்களுக்கு பல்வேறுவகையான லாபத்தை தொடர்ந்து அளிக்கும்.
பொதுவாக நீண்ட கால முதலீடு என்னும் வரும்போது நம்முடைய வாழ்க்கையில் அதிகமாக தேர்வு செய்வது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைதான்.
எப்பொழுதும் லாபம் தரும் திட்டங்கள்..!
தற்போதைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் தங்கம், ரியல் எஸ்டேட் என்பது மக்களின் முதன்மையான திட்டங்களாக எப்பொழுதும் இருக்கிறது.
ஏனெனில் இதனை தலைமுறையாக தொடரமுடியும், இது இந்திய குடும்பங்களில் மிக விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக உள்ளது.
மற்றும் பாரம்பரியமாக தங்கம் மற்றும் நிலம் வாங்குவது என்பது அனைத்து குடும்பங்களிலும் இது தொடர்கிறது.
ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம்..!
குறிப்பாக தங்கம் மிகவும் பிடித்தமான முதலீடாகவும் இருக்கிறது இது தேவையான அளவில் கையில் பணம் இருக்கும் அளவு முதலீடு செய்து கொள்ள முடியும்.
அதேவேளையில் இதனை விரைவாக பணமாக மாற்றிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
இதுவே ரியல் எஸ்டேட் துறை என்று வந்தால் நீண்ட கால முதலீடுகளில் விருப்பமாக இருக்கிறது.
எனினும் அதை சரியாக தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது, அப்படி சரியாக தேர்வு செய்யும்பட்சத்தில் எதிர்காலத்தில் அதிகமான லாபத்தை உங்களால் பெற முடியும்.
ரியல் எஸ்டேட் நன்மைகள் என்ன..!
ரியல் எஸ்டேட் என்பது மிகவும் நிலையான முதலீட்டு விருப்பம்மாகும், இதில் ஆபத்து குறைவான முதலீடாகவும் இருக்கிறது.
தங்கம் என்பது ஒரு விலை உயர்ந்த உலகம் இதில் அதிக ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது, பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது, இது பங்கு சந்தையில் வர்த்தகம்மாகிறது.
ஆனால் நிலத்தில் முதலீடு செய்வது அப்படியில்லை இதில் வரி சலுகை கிடைக்கிறது, வருமானமும் கிடைக்கிறது.
இது குடியிருப்பு வளாகங்கள் என வாடகை வடிவத்தில் வருமானம் கிடைக்கும் ஆனால் தங்கத்தில் அப்படி இல்லை.
எப்பொழுதும் இதனை நம்பி இருக்கலாம்..!
ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு அதிக அளவில் பணத்தொகை தேவை, இதன் மூலம் பல வகையான துறைகள் நம் நாட்டில் பயனடைகிறது.
இது துறைசார் அல்லது மறைமுகமாக பல ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறது, இது பொருளாதார வளர்ச்சியிலும் நம் நாட்டிற்கு முக்கிய பங்களிக்கிறது.
எனவே ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பாதுகாப்பானது மட்டுமில்லாமல், இது சரியான தேர்வாக இருக்கும் பட்சத்தில்.
உங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் நிரந்தரமான வருமானம் தரக்கூடிய திட்டமாகும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
indian govt insurance scheme in tamil
Kisan Vikas Patra scheme details 2023
tn rs 1000 rupees scheme need 6 documents