
Reserve Bank of India has introduced e RUPEE money
இந்தியாவில் e-RUPEE அறிமுகமாகும் e-RUPEE என்றால் என்ன? இதனை எப்படி பயன்படுத்துவது? எப்பொழுது புழக்கத்திற்கு வருகிறது..!
இந்தியாவின் e-RUPEE விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்ற தகவல்களை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
e-RUPEE என்றால் என்ன இது என்ன செய்யும், மக்கள் இதனை எப்படி பயன்படுத்தலாம்? என்பது போன்ற முக்கியமான தகவல்களை இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
இந்தியாவின் e-RUPEE என்பது டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் (INR) அல்லது கரன்சி ரூபாய் e-Currency Rupee என்று அழைக்கப்படுகிறது.
இது இந்தியா ரூபாய் டிஜிட்டல் பதிப்பாகும் இது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிடுகிறது,மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாகவும், வெளியிடப்பட்ட பயன்பாட்டிற்கு தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் நாணயம் என்பது காகித பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும்.
ரொக்க பணத்தின் மதிப்பு இரண்டுமே சமமாகும் உதாரணமாக 2000/-டிஜிட்டல் ரூபாய் என்பது 2,000/- ரூபாய் பணத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பொருள் ரூபாய் மதிப்பு எப்போதும் ஏற்றம் இறக்கமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் e-RUPEE என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் டிஜிட்டல் முறை பணமாகும்.
இது ரிசர்வ் வங்கி விரைவில் (QR) குறியீடுகள் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது இப்போது இந்த முறை வளர்ச்சியிலும் அதிகரித்துள்ளது.
e-RUPEE வரிசையில் 1 ரூபாய் 2,5,10,20,50,100,200,500,2000 போன்ற பண மதிப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையற்ற அனுபவத்திற்காக மக்கள் விரைவில் இனி QR UPI குறியீடுகள் மூலம் கட்டணங்களுடன் ஒருங்கிணைப்பட்ட.
இந்த டிஜிட்டல் பண முறையை பரிமாற்றத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற G20 நிகழ்வில் RBI பிரதிநிதிகள் QR UPI குறியீடுகள் மூலம் பணம் செலுத்துவது ஜூலை மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது UPI மூலம் CBDC பணம் செலுத்துவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் இந்திய முழுவதும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
CBDC-ஐ ஏற்கனவே தேர்வு செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களின் UPI QR பணத்தை குறியீடுகளை பயன்படுத்தி e-RUPEE பணத்தை பெறலாம் மற்றும் பயன்படுத்தலாம் பணம் பரிமாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான தகவலின் (State Bank of India, Bank of Baroda, ICICI Bank) போன்ற வங்கிகள் சேவையை தொடங்குகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பண பரிவு மாற்றத்தின் மூலம் நாட்டில் காகிதம் இல்லாத பண பரிமாற்றத்தின் தொகையை பல லட்சம் கோடிக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு என்பது முற்றிலும் சாத்தியமாகும் மற்றும் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவதும் குறைக்கப்படும்.
ஊழல் நடைபெறுவதும் பெருமளவில் குறிக்கப்படும் மேலும் பணம் அச்சிடுவதற்கு செலவு செய்ய வேண்டிய தொகையும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
jio laptop specifications price launching date
moovalur ramamirtham ammaiyar higher