
Russia Luna 25 Crash Site on Moon Found 2023
இப்பொழுது நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கு உலகின் மிக முக்கிய நாடுகள் கடும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது அதில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன்கள் முதன்மையில் இருக்கிறது.
இதில் ரஷ்யா,அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் இருக்கிறது ஆனால் சீனா ஏற்கனவே கடந்த வருடம் ஒரு புதிய ரோவரை நிலவில் இறக்கியது.
அது குறிப்பிட்ட பகுதியில் தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறது, இந்தியாவும் இதற்காக இரண்டு முறை விண்கலத்தை செலுத்தியது அதில் ஒரு முறை தோல்வி அடைந்தது.
ஒருமுறை வெற்றி பெற்றது முதலில் அனுப்பிய விண்கலம் நிலவில் தண்ணீர் உறைந்த வடிவில் இருக்கிறது என்ற தகவலை கண்டுபிடித்தது.
தற்போது இந்தியா சந்திரயான்-3 என்ற விண்கலத்தை நிலவில் செலுத்தியது இதை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என்று இந்தியா விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள்.
ஆனால் அதற்கு முன்பு இந்தியாவை முந்தி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் எதிர்பாராத விதமாக நிலவில் விழுந்து நொறுங்கியது.
இந்த நிலையில் தான் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய இடத்தை நாசாவின் ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய சார்பில் திட்டம் வகுக்கப்பட்டது கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
கடந்த மாதம் 23ஆம் தேதி சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதன் பிறகு விக்ரம் லேண்டரிலிருந்து வெளிவந்த பிரக்யான் குட்டி ரோவர் நிலவில் தற்போது ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.
தற்போது விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவில் தென்துருவத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்து தினம் தோறும் தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் நிலவின் கால் பதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்ய,அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4வது இடத்தையும்.
நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றையும் படைத்துள்ளது.
முன்னதாக ரஷ்யாவும் நிலவின் தேன் துருவத்தை ஆராய்ச்சி செய்ய லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்புவதாக ஒரு தகவலை வெளியிட்டு விண்கலத்தையும் அனுப்பியது.
கடந்த மாதம் 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் நேரடியாக நிலவை நோக்கி பயணித்தது.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு முன்பாகவே அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிடம் இருந்து தட்டிப் பறிக்க ரஷ்ய முயற்சி செய்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக நிலவில் தரை இறங்குவதற்கு முன்பாக ரஷ்யாவின் விண்கலம் நிலவின் கடைசி சுற்றுவட்ட பாதையில் வேகத்தை குறைக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் தரை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து லூனா 25 விண்கலம் தொலைத்தொடர்பை இழந்தது மற்றும் லோனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது,இதனை ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது.
ரஷ்யாவின் விண்கலம் நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்த
இதனால் ரஷ்யாவின் திட்டம் தோல்வியடைந்தது மேலும் லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சிகளும் சரியாக சொல்லப்பட்டது.
காரணம் என்பது அதில் இருந்த சில கருவிகள் சரியாக செயல்படாதது தான் முதன்மையான காரணம் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய இடத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா.
ஏற்கனவே நிலவுக்கு அனுப்பி நிலவில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தான் நிலவின் ஒரு பகுதியில் கடந்த 2022 ஜூன் மாதம் இந்த ஆர்பிட்டர் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தது ஆனால் தற்போது அந்த இடத்தை மீண்டும் போட்டோ எடுத்து அனுப்பியது.
அதில் புதிதாக பள்ளம் உருவாகி இருப்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.
இந்த பள்ளம் 10 மீட்டர் விட்டதில் உள்ளது,அதோடு லூனா 25 விண்கலம் தரை இறங்குவதற்கு திட்டமிட்ட இடத்திலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
இதனால் இந்த பள்ளம் என்பது ரஷ்யாவின் விண்கலம் நிலவில் மேற்பரப்பில் விழுந்ததால் இந்த பள்ளம் உருவாகி இருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த பள்ளம் இயற்கையாக உருவாக வாய்ப்பில்லை எனவும் நாசா தெரிவிக்கிறது,இருப்பினும் இதுபற்றி ரஷ்ய தரப்பில் இருந்து இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இந்தியாவில் சிறந்த 10 சேமிப்பு திட்டங்கள் 2023