
Russia Ukraine peace talks what are the decision
உக்ரைன் போர் பெலராஸில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நிறைவு ஆலோசிக்கப்பட்டு முக்கிய தகவல்கள் என்ன..!
ரஷ்யாவின் அதிரடியான இராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில் பெலராஸில் எல்லையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் இப்பொழுது வெளிவந்துள்ளன.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் தனது முழு வீச்சில்.
ராணுவ பலத்தை நடவடிக்கையை,அதிரடியாக தொடங்கியது, கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
போர் காரணமாக சுமார் லட்சக்கணக்கான நபர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற அதன் எல்லைகளில் குவிந்து உள்ளார்கள் இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பேச்சுவார்த்தையின் முயற்சி என்ன
இந்த சூழலில் அண்டை நாடான பெலராஸில் நாட்டில் வைத்து உக்ரைன் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஒரு புதிய அறிவிப்பை நேற்று அறிவித்தது ரஷ்யா.
பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சம்பாதித்துக் கொண்டு அதன்படி உக்ரைன் எல்லையில் பெலராஸில் இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
இரு தரப்பின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தை இந்திய நேரப்படி திங்கட்கிழமை மதியம் 3.30 அளவில் தொடங்கியது.
5 மணி நேரம் தொடர்ந்தது
பெலராஸில் எல்லையில் நடந்த இந்த அமைதிப் பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து.
தொடர்பாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ள செய்தியில் உக்ரைன் நாட்டு தரப்புடன்.
சுமார் 5 மணி நேரம் அமைதி பேச்சுவார்த்தை முடிவடைந்தது. இதில் பல்வேறு விவரங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையாக ஒப்புக் கொள்ளக் கூடிய வகையிலான பல்வேறு பொதுவான புள்ளிகளை கண்டறிந்தோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசிக்கப்பட்டு விவரங்கள் என்ன
இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து ரஷ்யப் படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என உக்ரைன் முதலில் தங்கள் வாதங்களை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் மாளிகை ஆலோசகர் மைக்கேல் பொடோல்யாக் தெரிவிக்கையில் இரு தரப்பு முடிவுகளும் எடுக்க கூடிய சில முன்னுரிமை விவாதங்கள் பற்றி இதில் அடையாளம் கண்டுள்ளன.
இவற்றை செயல்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பு பிரதிநிதிகளும் தங்கள் சொந்த நாட்டு தலைநகருக்கு திரும்பியுள்ளார்.
மிக விரைவில் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சு வார்த்தையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் இன்று விவாதிக்கப்பட்ட முக்கியமான விவரங்கள் நடைமுறைப்படுத்துவது குறித்து.
பல்வேறு ஆலோசனைகள் செயல்படுத்தப்படும் என்று மைக்கேல் பொடோல்யாக் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியான பின்னர் தான் ரஷ்யா தனது உக்கிரமான தாக்குதலை சற்று குறைந்துள்ளது என சொல்லலாம்.
கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இந்தப் போரில் 7 அப்பாவி குழந்தைகள் உட்பட 102 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது.
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் 2022
அதுமட்டுமில்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும் ரஷ்யாவிலிருந்து தங்களுடைய உற்பத்தி மற்றும் விற்பனையை விலகிக் கொள்வதாக அறிவித்து வருகிறது.
இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவிருக்கும் உலக கால்பந்து கோப்பையில் ரஷ்யா அணி இடைநீக்கம் செய்யப்பட்டது என்ற அறிவிப்பும் வெளியானது.
TNPSC announcement Aadhar update has been extended
இவ்வாறு பல்வேறு வகையான பொருளாதார தடைகள் மற்றும் விளையாட்டு சார்ந்த தடைகள் ரஷ்யாவின் மீது தொடர்ந்து குவிந்து வருகிறது.
வேறு வழியில்லாமல் ரஷ்யா இப்பொழுது அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.