Uncategorized

Salem to Chennai 8 way road Project again starting

Salem to Chennai 8 way road Project again starting

Salem to Chennai 8 way road Project again starting

8 வழி சாலைக்கு திமுக எதிரி கிடையாது நிலங்களை கையகப்படுத்தி தான் ஆகவேண்டும் அமைச்சர் எ.வ.வேலு அதிரடி பேட்டி..!

8 வழி சாலை திட்டத்திற்கு திமுக எதிரி கிடையாது போக்குவரத்து அதிகமாகி உள்ளதால் நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.

சேலம் சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது அப்போது திமுக அரசு கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து.

குறிப்பாக திரு மு க ஸ்டாலின் அவர்கள் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் சேலத்தில் இதற்கான போராட்டங்களும் நடைபெற்றது.

திட்டத்தை திமுக அனைத்து தரப்பிலும் கடுமையாக எதிர்த்தது ஆனால் இப்பொழுது லாபம் கிடைக்கும் நோக்கில்.

இந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்த இப்பொழுது தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

8 வழி சாலை சேலத்தில் இருந்து சென்னை வரை போடப்படுகிறது.

இதில் எதிர்ப்புறத்தில் நான்கு வாகனமும் அதற்கு எதிர்ப்புறத்தில் 4 வாகனமும் செல்லும் வகையில் மிகப்பெரிய அளவில் இந்த சாலை போடப்பட உள்ளது.

இந்த சாலைக்காக மொத்தம் சுமார் 10,000/- கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மொத்தம் 274 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை போடப்பட உள்ளது.

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வழியாக சென்னை செல்லும் வகையில் இந்த சாலை மிகவும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது

இந்த சாலை முழுவதும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் அமைய உள்ளதால்பல ஏக்கர் விவசாய நிலங்கள் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் கிராமசபை கூட்டம் நடத்தி அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் பல்வேறு கட்சிகள் தொடுத்தன.

திமுகவும் 2018-ஆம் ஆண்டில் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து சேலத்தில் மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்தது திமுக.

உயர் நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்ற மு க ஸ்டாலின்

கடந்த 2018ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார் திரு மு க ஸ்டாலின் அவர்கள்.

பாமக கட்சி தொடர்ந்த வழக்கில் இந்த திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த எட்டு வழி சாலைக்கு இடைக்கால தடை விதித்தது அப்போது தி மு க ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

நிறைவேற்றத் துடிக்கும் திமுக

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய ஒரு தொகையை ஒதுக்கி உள்ளதால்.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பாதுகாப்பானதா..!

திமுக அரசு இதன் மூலம் மிகப்பெரிய ஒரு தொகையை எதிர்பார்க்கிறது என்று சமூக வலைத்தளங்களில் இதற்கான பதிவேடுகள் அதிகமாக வலம் வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டத்தை முழுவதும் ரத்து செய்யப்படும் எனவும் ஒரு அறிவிப்பு வெளிவந்தது.

How to link aadhaar number with voter id card in tamil

ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட எந்த திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.

அதற்கு நேர்மாறாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறது இதனால் மக்களிடம் கடுமையான ஒரு எதிர்வினையை திமுக அரசு தினந்தோறும் சந்தித்து வருகிறது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0