
Sasikala announced the details of Jayalalithaa’s death
டிசம்பர் 4 மாலை 4:30 மணிக்கு நடந்தது என்ன மயங்கி விழுந்த சசிகலா கண்ணை மூடிய செல்வி ஜெயலலிதா பரபரப்பான வாக்குமூலம்..!
ஜெயலலிதா மரணம் அடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் சொல்லும் டிசம்பர் 4ஆம் தேதி மாலை அப்போலோ மருத்துவமனையில்.
காப்பி பன் கேட்டார் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார் என சசிகலா தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலத்தில் என்ன நடந்தது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
டிசம்பர் மாலை 4:20 மணிக்கு நடந்த அதிர்ச்சியூட்டும் செயல்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை சுமார் 4:20 மணி அளவில் ஜெயலலிதா பன் காபி கேட்டார்.
மருத்துவமனை செவிலியர் அதைக் கொண்டு வந்தார் ஜெயலலிதா கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு கண்ணாடி போட்டுக் கொண்டு.
டிவியில் ஜெய் வீர ஹனுமான் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார் அருகில் வைத்து விடு சீரியல் முடிஞ்சதும் எடுத்துக்கிறேன் என்றார்.
சூடு ஆறி விடும் என்று கையசைத்து சற்று பொறு சசி என்றார் சிறிது நேரத்தில் சீரியல் முடிந்தவுடன் கையில் இருந்த ரிமோட் மூலம் டிவியை ஆப் செய்தார்.
நான் ட்ராலியை அருகில் வைக்க முயன்றேன் அப்போது ஜெயலலிதாவுக்கு அருகில் ஒரு பெண் மருத்துவரும் செவிலியர் ஒருவரும் நின்றுகொண்டிருந்தன.
அறைக்கு வெளியே டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் அமர்ந்து இருந்தார்.
திடீரென்று ஏற்பட்ட மிகப் பெரிய மாறுதல்
திடீரென்று ஜெயலலிதாவின் உடலில் ஒரு பெரிய நடுக்கம் ஏற்பட்டது ஜெயலலிதாவின் நாக்கு ஒரு பக்கமாக துரத்த பல்லை கடித்துக்கொண்டு ஏதோ சத்தம் சத்தமிட்டார்.
நான் அப்போது அக்கா அக்கா என கத்த தொடங்கினேன் ஜெயலலிதா என்னை பார்த்துக் கொண்டே தனது இரு கைகளையும் உயரத் தூக்கி என்னை நோக்கி வந்தார்.
நான் கதறிக்கொண்டே ஜெயலலிதாவை பிடித்தேன் ஜெயலலிதா என்னை பார்த்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தார்.
அருகில் மருத்துவர்கள் செவிலியர்கள் துரிதகதியில் சிகிச்சை கொடுத்தார்கள்.
அக்கா அக்கா என கூப்பிட்டேன்
உடனடியாக தகவல் தெரிவிக்கவும்பட்டதால் சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது.
அங்கிருந்த டாக்டர் ஒருவர் என்னை ஜெயலலிதாவின் காதுக்கு அருகில் சத்தமாக கூப்பிடச் சொன்னார்.
நான் அக்கா அக்கா என பலமாக கத்த தொடங்கினேன், இரு முறை என்னை ஜெயலலிதா பார்த்தார் பிறகு கண்களை மூடி விட்டார்.
சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என என்னை வெளியே போகச் சொல்லிவிட்டார்கள்.
தாங்க முடியாத கவலையில் கத்தி கூச்சலிட்டு நான் மயக்கமாகி விட்டேன்.
நான் மயக்கம் தெளிந்த போது ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வந்தன ஏராளமான மருத்துவர்கள் அங்கு வந்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர் 2ம் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறைக்கு ஜெய லலிதாவை அழைத்துக் சென்று சிகிச்சை அளித்தார்கள்.
மீண்டும் மீண்டும் மயக்கமடைந்த சசிகலா
எய்ம்ஸ் மருத்துவ குழு டாக்டர் ரிச்சட் குழுவைத் தொடர்பு கொண்டு சிகிச்சை நடக்கிறது எக்மோர் கருவி இணைத்துள்ளோம் இதனால் செயலில் இருந்த இதயம் செயல்படக் கூடும் என என்னிடம் தெரிவித்தார்கள்.
வயிற்றுப் புண் மற்றும் குடல் புண் சரியாக மூலிகை வைத்தியம்..!
ஜெயலலிதா எப்படியும் பிழைத்து விடுவார் அதிசயம் நடக்கும் நம்பிக்கையோடு சிகிச்சை அளியுங்கள் என நான் சொன்னேன்.
ஆனால் டிசம்பர் 5-ஆம் தேதி வரை எந்த ஒரு முன்னேற்றமும் நடக்கவில்லை.
Medical report regarding the death of Ms J Jayalalitha
இனிமேலும் முன்னேற்றம் ஏற்படாது எனும் அதிர்ச்சி செய்தியை தயங்கி தயங்கி தெரிவித்தார்கள்.
அக்கா இறந்த தகவலை கேட்ட உடனே நான் கதறி அழுது மீண்டும் மயக்கமானேன் இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.