
Savukku Shankar acquitted in contempt of court case
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர் விடுவிப்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பு என்ன..!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மதுரை கிளை பிரபல யூட்யூப் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
அதனை ரத்து செய்ய கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற பட்டியலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கருக்கு விதித்த தடை இந்த உச்ச நீதிமன்றம் நீக்குகிறது என்று ஒரு தீர்ப்பை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் பிரபலமாக இருப்பவர் சங்கர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொலைபேசி உரையாடல்கள்.
கசிந்த விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டார் அதன் பிறகு அவர் நிரபராதி என தீர்ப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக அவர் இடைக்கால பணி நீக்கத்தில் இருக்கிறார்.
சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதற்கிடையே தான் சவுக்கு சங்கர் நீதிமன்றம் நீதிபதிகள் பற்றிய சில கருத்துக்களை விமர்சனமாக வைத்தார்.
இதனால் சங்கர் மீது சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரை தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.
மேலும் சவுக்கு சங்கருக்கு எச்சரிக்கையும் விடுத்தது ஆனால் சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்ததால் இதையடுத்து கிரிமினல் அவமதிப்பு வழக்காக அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு.
தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த உத்தரவு செப்டம்பர் 15 பிறப்பிக்கப்பட்டது இதையடுத்து சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறையில் சவுக்கு சங்கருக்கு நடந்தது என்ன
தற்போது கடலூர் மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் சில கோரிக்கைகளை அவருடைய வழக்கறிஞர் மூலம் முன்வைத்தார்.
அதில் அவருக்கு சிறையில் மன உளைச்சல்கள் தரக்கூடிய செயல்கள் நடத்தப்படுவதாகவும்.
அவரை தனிமை சிறையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் அதுமட்டுமில்லாமல் சவுக்கு சங்கரை பார்க்க பார்வையாளர்களுக்கு சில வாரங்கள் வரை தடை விதித்தது சிறை நிர்வாகம்.
இதன் மூலம் அவரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது இதனால் அவர் உண்ணாவிரதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
மேல்முறையீட்டு மனு தாமதம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த தீர்ப்பை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீண்ட காலமாக விசாரணைக்கு வராமல் இருந்தது இந்த நிலையில் தற்போது விசாரணை பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி சங்கரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார்
நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர் அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப் பட்ட ஆறுமாத சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அதிக பால் உற்பத்தி செய்யும் முதல் 10 கால்நடை இனங்கள்..!
அதுமட்டுமில்லாமல் இனிவரும் காலங்களில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குகளை பற்றி சவுக்கு சங்கர் எந்த ஒரு கருத்தும் சொல்ல கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Car explosion in Covi and raids across Tamil Nadu
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் சவுக்கு சங்கர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று அல்லது நாளை சிறையிலிருந்து வெளியில் வரலாம் என தகவல்கள் வருகிறது.