
Scams have increased through WhatsApp
பார்ட் டைம் ஜாப் வாட்ஸ் அப்பில் லிங்க் வந்தால் கவனமாக இருக்க வேண்டும் மக்களே அலர்ட் செய்த காவல்துறை என்ன நடக்கிறது இணையதளத்தில்..!
வேலை தேடுபவர்கள் மற்றும் இல்லத்தரசிகளை குறிவைத்து பகுதி நிறை வேலை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி அதன் மூலம் மோசடிகள் நடப்பதாக புகார்கள் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட இந்த காலத்தில் புதுப்புது மோசடிகளும் அரங்கேறி வருகிறது மக்கள் தற்போது அதிக அளவில் இணைய வசதி பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்வதால்.
வங்கி விவரங்களை பெற்று அதன் மூலம் ஒரு பக்கம் மோசடி நடைபெற்று வருகிறது.
புதிய மோசடிகள் தொடங்கியுள்ளது
அதாவது வங்கிகளில் இருந்து பேசுகிறோம் ஆதார எண் கொடுக்க வேண்டும், ஏடிஎம் கார்டு எண் கொடுக்க வேண்டும், என எதையாவது செல்போனில் அழைத்து பேசும் மோசடி கும்பல் இந்த விவரங்கள் கிடைத்துவிட்டால்.
உடனடியாக வங்கி கணக்கில் இருந்து மொத்தமாக பணத்தை திருடி விடுகிறார்கள்,இப்படியான மோசடிகள் ஒரு பக்கம் என்றால் பரிசு பொருட்கள் விழுந்து இருப்பதாகும்.
அதனை பெற குறிப்பிட்ட தொகையை கட்டுமாறு கூறி மோசடி நடக்கிறது, பெரும்பாலும் மக்களின் ஆசையை தூண்டி வலையில் விழ வைத்து இது போன்ற மோசடிகள் நிகழ்கிறது.
இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு நூதன மோசடி அதிகரித்து வருகிறது என காவல்துறையினர் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.
மெசேஜ் வருகிறது இந்த வேலையை பற்றி விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும், அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் ஒரு டெலிகிராம் குரூப்பில் இணைந்து விடுவார்.
அந்த குரூப்பில் யூ டியூப், சினிமா, ஹோட்டல் போன்றவற்றை லைக் மற்றும் ரிவ்யூ செய்தால் 50 தருவதாக தெரிவிப்பார்கள் இதன்படி செய்தால் உடனடியாக அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விடுவார்கள்.
தொடர்ந்து இதுபோல் பணம் பெற்று லாபம் பெற ப்ரீபெய்ட் டாஸ்க் என புது டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள்.
இந்த குரூப்பில் ஏற்கனவே இருக்கும் பலரும் கூட்டு சேர்ந்து அதிக அளவு பணம் கிடைத்ததாக கூறி ஆசையை தூண்டுவார்கள்.
அதன்பிறகு காயின் கலெக்டர் என்ற இணையதளத்தில் ஒரு கணக்கை தொடங்கி டாஸ்க் கொடுப்பார்கள்.
மொத்தமாக 20 டாஸ்க்க்களை கொடுத்து ஒவ்வொரு டாஸ்க் இருக்கும் இந்த மோசடி கும்பல் பணம் அனுப்பும்.
அதற்காக ஒரு வங்கி கணக்கையும் உருவாக்கி அதில் முதலீடு செய்து வருவார்கள்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற
பின்பு பகுதி நேர வேலைக்கான மொத்த தொகையை காயின் கலெக்டர் இணையதளத்தில் அவர்களுக்கு என்று தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் தெரியப்படுத்துகிறார்கள்.
இந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் அனைத்து டாஸ்க்களையும் கூறி முதல் டாஸ்க் ரூபாயிலிருந்து 10வது டாஸ்க் ஒரு கோடி வரை கட்ட சொல்லி மோசடி நடக்கிறது.
தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் தொழிலில் How to make coconut oil bath soap in tamil
இதுபோல புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது எனவே இது மாதிரி டெலிகிராம் வாட்ஸ் அப் குரூப் மெசேஜ்களை பார்க்கும்போது மக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாக வாட்ஸாப் குரூப் மூலம் மோசடிகள் என்பது பெருகிவிட்டது, குறிப்பாக வங்கிகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு இந்த மோசடிகள் அதிக அளவில் நிகழ்கிறது.