
Senthil Balaji continues to be investigated by ED
அமலாக்கதுறையின் அடுத்த திட்டம் அதிர்ந்த செந்தில் பாலாஜி டெல்லி அழைத்துச் செல்ல ஆலோசனை இன்றும் விசாரணை விடிய விடிய..!
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த செந்தில் பாலாஜி.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்று தருவதாக தெரிவித்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பதிவு செய்த 3 வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிற்பம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சமன் அனுப்பியது.
செந்தில் பாலாஜி இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,அமலாக்கத்துறை சமனை ரத்து செய்தது இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வழக்கு விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை உறுதி செய்தது மேலும் இந்த வழக்கை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடைய தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் அடுத்தடுத்து நடைபெற்றது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் சம்மனை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
இதனால் அவர் அப்போது கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக இருதய அறுவை சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா இந்தக் கழுதை எதிர்த்து ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தார்கள்,அதனைத் தொடர்ந்து 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்படவில்லை குற்றம் செய்தவர்கள் யாரா இருந்தாலும் விசாரணைக்கு தகுதி உடையவர்கள்.
செந்தில் பாலாஜி இந்த வழக்கை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தாம் குற்றவாளி இல்லை என நிரூபிக்க வேண்டும்,என சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தொடரப்பட்டது
உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது,இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் திங்கட்கிழமை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
செந்தில் பாலாஜியின் தரப்பு மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது,செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டப்படி சரி என்றும்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை இரவு செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்றார்கள்.
திங்கட்கிழமை இரவே அவரிடம் விசாரணை தொடங்கிய அமலாக்க துறையினர் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விக்கு செந்தில் பாலாஜி அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்தார்கள்.
மதிய உணவுக்கு இடைவேளைக்கு பிறகும் விசாரணை தொடங்கியது,விசாரணை இரவு வரை நீடித்தது,தேவைப்பட்டால் அவரை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Airtel launch xstream fiber offers 5G speed 2023
Redmi 5G smartphone specifications price
1000 fine if you have two PAN cards in tamil