
Signs might indicate your liver disease in tamil
கல்லீரல் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் எச்சரிக்கையாக இருங்கள்..!
ஒரு நபர் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் சரியாக செயல்பட்டால் மட்டுமே முடியும்.
உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சரியாக செயல்பட்டால் மட்டுமே மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மனித உடலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நச்சுக்கள் மற்றும் கழிவுகள் சேருகிறது, இப்படி உங்கள் உடலில் சேரும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை முறையாக வெளியேற்றினால் மட்டுமே.
உடல் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும், இப்படி உடலில் சேரும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் செயலில்தான் கல்லீரல் ஈடுபடுகிறது.
இது பித்த நீரை உற்பத்தி செய்வதன் மூலம் உணவுகளை செரித்து கொழுப்புகளை உடைத்தெறிய உதவுகிறது.
கல்லீரலின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவது.
இப்படி முக்கியமான வேலையை செய்யும் கல்லீரல் செயலிழந்தால் உடலில் கற்பனை செய்ய முடியாத அளவில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு விடும்.
உடலில் மிக முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் அது ஆல்கஹால் தான்.
ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பவர்கள் உடலில் கல்லீரல் கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும், இதன் விளைவாக அவர்கள் உடலில் பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படும்.
சரி ஒரு நபரின் கல்லீரல் கற்பனை செய்ய முடியாத அளவில் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தால் அது வெளிப்படுத்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்று தெரியுமா.
பசியின்மை
ஒருவருக்கு பசி எடுக்காமல் இருந்தால் அது கல்லீரல் பிரச்சனை அறிகுறிகளில் ஒன்று, ஏனெனில் கல்லீரல் தீங்குவிளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் இருக்கும் போது இந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டு விடும்.
எனவே உங்களுக்கு சில நாட்கள் தொடர்ந்து பசி இல்லாமல் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சிறுநீரின் நிறம் மாற்றம்
சிறுநீர் மற்றும் கழிக்கும் மலத்தின் நிறமானது பிலிரூபின் என்னும் கெமிக்கல் கலவை விளைவாகும்.
நிறம் அடர் நிறத்தில் இருந்தால் கொலஸ்டாஸி என்னும் கல்லீரல் நோய் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
கொலஸ்டாஸி என்பது கல்லீரலில் இருந்து பித்தநீர் ஓட்டத்தை குறைக்கும் அல்லது தடுக்கும் ஒரு நிலையாகும்.
மலக்குடல் இரத்தப்போக்கு
கல்லீரல் நோய் முற்றிய நிலையில் இருந்தால் அதாவது சிரோசிஸ் போன்ற நிலையானது.
கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களின் வடுக்களை ஏற்படுத்திய சேதத்தை விளைவிக்கும்.
இதன்காரணமாக மலக்குடல் ரத்தப்போக்கு ஏற்படக் கூடும் இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.
மூச்சுத் திணறல்
சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் அது வெறும் இதய பிரச்சனையின் அறிகுறிகள் மட்டுமில்லை கல்லீரல் பிரச்சினை முற்றிய நிலையில் இருந்தால் கூட நுரையீரல் பாதிக்கப்பட்டு விடும்.
அதன் விளைவாக மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சரும அரிப்பு
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் சருமம் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை காரணமாக உப்பை வெளியேற்ற முடியாமல் இருக்கும் அந்த உப்பு சருமத்திற்கு அடியில் தங்கிவிடும்.
குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்றால்
இதன் விளைவாக சருமத்தில் கடுமையான அரிப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும், எனவே உங்களுக்கு காரணமின்றி சரும அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டால்.
How to apply National Health Id card online
அதை கண்டுக்காமல் இருக்கக்கூடாது உடனே மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.