
Signs that the kidneys are not healthy in tamil
உங்கள் கிட்னி ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள் இந்த பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி..!
சிறுநீரகத்தில் ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால் அது பல தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பது நமக்கு நன்கு தெரியும்.
அதை எப்படி நம்முடைய உடலில் சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே கண்டுபிடிப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சிறுநீர் கடுப்பு போன்ற ஒரு சில பிரச்சினைகளை தவிர தீவிரமான சிறுநீரக கோளாறு ஆரம்பக்கட்டத்தில் பெரிதாக வெளியில் தெரிவதில்லை.
அப்படி சில அறிகுறிகள் தெரிந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.
நாளடைவில் அது பெரிய பிரச்சினையாக உருமாறி விடும் சரி அதை ஆரம்பத்தில் எப்படி கண்டறிவது.
சிறுநீரகப் பிரச்சினை வரப்போகிறது என்பதை நமக்கு எச்சரிக்கும் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
சிறுநீரகம் மனித உடலில் சிறுநீரகத்தை பிரித்து வெளியேற்றும் வேலையை மட்டும் செய்கிறது, என்று பல நபர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது உண்மையில்லை.
சிறுநீரகம் மனித உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி கொடுக்கும் வேலை செய்கிறது, சிறுநீரகம் ஒருவேளை சரியாக செயல்படவில்லை என்றால் மனித உடலில் ரத்த சுத்திகரிப்பு முழுவதும் நின்றுவிடும்.
இது சிறிய அளவில் இருந்தாலும் இதனுடைய வேலைபாடு என்பது செயற்கையில் எந்த ஒரு மனித தொழில் நுட்பத்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
இதனுடைய அறிகுறிகள் என்ன
மனித உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்படாமல் போனால் ஏற்படக்கூடிய அனைத்துமே சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள் மட்டுமே.
அவை உடலில் ஏற்படும் அரிப்பு, தசைப்பிடிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, கால் மூட்டுகளில் திடீரென்று வீக்கம் ஏற்படுதல், சிறுநீர் கழித்தலில் ஏற்படும் அதிகமான சிரமங்கள், அதிகமான தூக்கமின்மை, போன்ற பல்வேறு வகையான அறிகுறிகள் ஏற்படும்.
இதற்கான காரணங்கள் என்ன
ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் முதன்மையாக இருக்கிறது அதிகமாக புகை பிடித்தல் காரணமாக சிறுநீர் பிரச்சினை ஏற்படுகிறது.
நீரிழிவு பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், போன்ற பிரச்சினைகளும் சிறுநீரகப் பிரச்சினைகள் உண்டாவதற்கு காரணங்களாக இருக்கிறது.
இதனை தடுக்கும் வழிமுறைகள் என்ன
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் முதலில் செய்ய வேண்டியது உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ரத்தத்தில் ஏற்படும் அதிகப்படியான குளுக்கோஸின் அளவு உடலில் பல்வேறு வகையான புதிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
அதில் மிக முக்கியமான ஒரு பிரச்சனை சிறுநீரக பிரச்சனை இதனால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்.
அதைக் கட்டுக்குள் வைக்க முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றுதல் மிகவும் அவசியம்.
சரியான உணவுப் பழக்கம் தேவை
நோய் தொற்றுகளுக்கு என்னதான் மருந்து செயற்கையான முறையில் எடுத்துக் கொண்டாலும் இயற்கை முறையில் கிடைக்கக் கூடிய.
உணவு மட்டுமே உங்களுடைய உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் இதை நீங்கள் முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மனித உடலில் உள்ள திசுக்கள், அணுக்கள், ரத்த நாளங்கள், உள்ளிட்ட அனைத்துமே எடுத்துக்கொள்ளும் உணவுகளிலிருந்து ஆற்றலைப் பெறுகிறது.
அதனாலதான் அவைகள் செயல்படுகிறது, அதனால் உண்ணும் உணவில் மிகுந்த கவனமாக எப்பொழுதும் இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருக்கலாம் எப்பொழுதும்.
குறிப்பாக சமச்சீர் உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் மனித உடலுக்கு மிகவும் அவசியம் இதை கருத்தில் கொண்டு உணவு முறைகளை கையாள வேண்டும்.
உடற்பயிற்சி அவசியம் தேவை
நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒரு பழக்கவழக்கம் என்றால் அது உடற்பயிற்சி.
ஆரோக்கியமாக சாப்பிட்டால் மட்டும் போதாது உடற்பயிற்சி செய்ய வேண்டும் கட்டாயம் தினசரி வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி மிக முக்கியமாக அமைந்துள்ளது.
வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தம், போன்றவை முற்றிலும் குறைய வேண்டுமென்றால் உடற்பயிற்சி மிக அவசியம்.
கடினமான உடற்பயிற்சிகள் தான் செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளையில்.
ஒரு மணி நேரம் யோகா, நடைப்பயிற்சி, தியானம், உடற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று பயிற்சி எடுத்தல் போன்றவை செய்தால் நன்றாக அமையும்.
கவனமுடன் இருக்க வேண்டும் உடல் எடையில்
இயல்பாகவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு திடீரென்று உடல் எடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
குறிப்பாக உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவே திடீரென்று உடல் எடை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று முழு உடலையும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
மது புகைப்பிடித்தல் அறவே கூடாது
நுரையீரல் மட்டுமல்ல சிறுநீரகத்தையும் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது.
மதுப்பழக்கம்,புகைப்பிடிக்கும் பழக்கம், இரண்டையும் விட்டு விடுவதுதான் இந்தப் பழக்கத்தை விட்டுவிடலாமா வேண்டாமா என்ற தயக்கம் இல்லாமல் முதலில் இந்த பழக்கத்தை முற்றிலும் நிறுத்தி விடுங்கள்.
ஜிலேபி கெண்டை மீனின் ஆரோக்கிய நன்மைகள்
சோடியம் குறைவாக இருக்க வேண்டும்
சிறுநீரக கோளாறுகள் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு மனித உடலில் உள்ள சோடியத்தின் பங்கு முக்கியமாக அமைந்துவிடுகிறது.
Best 10 agriculter business ideas in tamil
தினசரி சாப்பிடும் உணவுகளில் பருப்பு மற்றும் காய்கறிகளில் சோடியம் இருக்கும்.
அதை தாண்டி உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது, உப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.