
Simple energy announced new factory in tn
தர்மபுரியில் ரூ 2500/- கோடியில் அமையும் சிம்பில் எனர்ஜியின் பிரமாண்ட தொழிற்சாலை 2023ல் திறக்கப்படுமா?
தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்காக 330 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்த முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்ப்போம்.
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குள் ஒன்றாக சிம்பில் எனர்ஜி இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின்போது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக சிம்பிள் எனர்ஜி என்ற மாடலை அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது.
அந்தவகையில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிம்பில் எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு தொழிற்சாலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது.
முதல் தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடங்கப்பட்டுள்ளது, இரண்டாவது தொழிற்சாலை தர்மபுரி மாவட்டத்தில் 600 ஹெக்டரில் மிக பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் புதிய தொழில் சாலை நிறுவுவதற்காக தற்போது அந்த நிறுவனம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் ஓலா போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து உள்ள ஓசூரில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் தொழிற்சாலை இப்பொழுது கட்டமைத்து வருகிறது பிரமாண்டமாக.
வருடத்திற்கு 1 மில்லியன் ஸ்கூட்டர்
வருடத்திற்கு ஒரு மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு மிக பிரமாண்டமாக திறன் கொண்டதாக உருவாக்கப்படும்.
இந்த ஓசூர் தொழிற்சாலையில் வாகனங்கள் தயாரிப்பு பணியில் அடுத்ததாக 2022ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 2023-ம் ஆண்டில் தர்மபுரியில் ஒரு தொழிற்சாலையை திறக்க சிம்பில் எனர்ஜி நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதனை தொழிற்சாலை என சொல்வதை காட்டிலும் மிக பிரமாண்டமான தொழிற்சாலை என்று சொல்லவேண்டும்.
சிம்பிள் எனர்ஜின் ஓசூர் தொழிற்சாலை ஒரு மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டு வரும் நிலையில்.
தர்மபுரி அமைய உள்ள தொழிற்சாலை அதனைக் காட்டிலும் சுமார் 12 மடங்கு அதிகமாக 12.5 மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் அளவிற்கு பெரியதாக உருவாக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தொழிற்சாலைக்காக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது வரையில் 21 மில்லியன் டாலர்களை சேகரித்துள்ளது.
மிக பிரம்மாண்டமான
2023 இல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாவது தமிழக தொழிற்சாலைக்காக தர்மபுரி மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலங்களை வாங்க சிம்பில் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த 600 ஏக்கர் பரப்பளவில் தான் தொழில்சாலை மட்டுமின்றி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையங்களும் சோதனைப், பகுதிகளையும்,நிறுவனம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்ல மெல்ல அதிகரிக்கும் பயன்பாடு
இப்பொழுது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மெல்ல மெல்ல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஓசூரில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையை உருவாக்கி உள்ளது.
இது 90% பெண்களால் இயங்கும் இந்த தொழிற்சாலை மூலம் வருடத்திற்கு 10 மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்க முடியும்.
குறைகடத்திகள் பற்றாக்குறை நிலவுகிறது
இருப்பினும் உலக அளவில் இப்பொழுது குறைகடத்திகளின் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய முடியாமல் ஓலா நிறுவனம் போராடி வருகிறது.
How to apply National Health Id card online
இந்த தொழிற்சாலை வருடத்திற்கு 10 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் அளவிற்கு இருந்தாலும் இதனை காட்டிலும் சற்று அதிகமாக தயாரிக்கக் கூடியதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அமைக்க கூடிய தொழிற்சாலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இருக்கும்.